ஆண்டவரின் நல்ல கரத்தை காண 5 திறவுகோல்கள்

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 23, 2018

ஆண்டவரின் இதயதை சுமந்து செல்லுகிற உணர்ச்சிமிக்கவர்களை அவர் தேடுகிறார்.
தன்னுடைய சுதந்தரத்திற்காக வல்லமை வாய்ந்த ஆண்டவரை தேடி முயன்று விடுதலையை உணர்ச்சியோடு பெற்று கொண்ட சுவரொட்டி மனிதன் நெகெமியா.

நெகேமியா 2:2-8
“அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறதுஎன்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழியவேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின்கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின்வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்னஎன்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கிஜெபம்பண்ணி,
ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்குஉமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின்கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்குநீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜாஎன்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீஎப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம்செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்பஅவருக்குச் சித்தமாயிற்று.
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்குஅப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்குஅவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,”

என் தேவனாகிய கர்த்தருடைய கிருபை எனக்கு என்னத்தைச்சொன்னதோ, அதை ராஜா எனக்குக் கொடுத்தார்.

நெகேமியா கர்த்தரைத் தேடி, எருசலேமைத் திரும்பப் கட்டும்படிஅனைவருக்கும் அபாயம் ஏற்படுத்தினார்.

நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து ஐந்து முக்கிய பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

திறவுகோல் # 1. உபவாசித்து, துயரபட்டு ஜெபித்து அவருடைய முகத்தை தேடுங்கள்.

நெகேமியா 1:4 “இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான்உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:”

ஆண்டவருடைய பிரசனத்தில் உட்கார்ந்து அழுது நேரம் எடுக்கவேண்டும். ஒரு வாரம் ஒரு முறை உபவாசிக்க வேண்டும். இது ஆண்டவருக்குளாக நம்  வாழ்வில் இயற்கையக பொங்கி வழியட்டும். நம்முடைய சூழ்நிலையில் ஆண்டவருடைய கவனத்தை நாம் பெறுவோம். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் பெருமூச்சு விட்டால், அவருடைய இதயத்தை உங்கள் மூலமாக வெளியிட ஒப்புக்கொடுங்க்கள். நெகேமியாவைப் போலவே, உங்கள் கூக்குரல் பரலோகத்திற்கு எட்டட்டும்! உங்கள் கண்ணீர் உங்களுக்காக பேச ஆரம்பிக்கட்டும். நான் ஆண்டவரின் சந்நிதிக்கு முன்பாக கண்ணீர் விடும்போது, மனிதனின் முன்னிலையில் நான் அழுவதில்லை.

திறவுகோல் # 2. அவரை ஆராதியுங்கள். நம் அனைவருக்கும் உதவி தேவை, ஆனால் முதலில் அவரை ஆராதிக்கலாமா?

நம்முடைய தேவன்  உடன்படிக்கையுள்ள தேவன். நாம் அவரை விசுவாசிக்கலாம்.

நெகேமியா 1:5 “பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில்அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக்கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும்காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,”

நாம் அவரையும் அவருடைய நண்மைகளை நினைக்கும் போது, விசுவாசம்  செயல்ப்பட்டு, அவருடைய வார்த்தையின் உண்மையைஅறியும் போது ஆண்டவரின் இதயதிர்க்கு நம்முடைய ஜெபம்உண்ரிச்சி வசமாக மாருகிறது.

திறவுகோல்  # 3 மனந்திரும்புங்கள்.

நெகேமியா 1:6 “உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காகஇன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல்புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களைஅறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும்இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.”

நம் ஆண்டவர் மிகவும் பரிபூரணராக இருக்கிறார். தவறு இருந்தால், அது நம்மிடம்தான் உள்ளது. எனவே, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட வேண்டும்.  ஆண்டவரின் பாதங்களுக்கு முன்பாக நம்மைத் தடுத்து நிறுத்த நம் வாழ்வில் ஒன்றும் இருக்க கூடாது. நம் பாவத்தை நாம் ஆண்டவரிடம் ஒப்படைக்க வேண்டும், ஏனென்றால் எதிரியால் தாக்குவதற்கு ஒரே வழி, அரிக்கையிடாத  பாவம்.

திறவுகோல்  #  4 நம்முடைய ஆண்டவரை நினைத்து, அவருடைய வார்த்தையை ஞாபகப் காணிக்கையாக் பயன்படுத்துங்கள்.

நெகேமியா 1:7-9 “ 1 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும்கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகியமோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளேசிதறடிப்பேன் என்றும்,
நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டுபோனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான்அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான்தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக்கொண்டுவருவேனென்றும் தேவரீர் உம்முடைய தாசனாகியமோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

ஆண்டவர் சொன்தை, ஆண்டவர் செய்வார் என்பதை அறிந்துநெகேமியா வேத வார்த்தையிலிருந்து ஜெபித்தார். ஆண்டவருடையவார்த்தையை அவருக்கு முன்பாக மன்றாடும்போது அதில் மிகுந்தவல்லமையும் இருக்கிறது.

திறவுகோல்  # 5 கர்த்தர் செய்ததை நினைவில் கொள்ளுங்கள்.

நெகேமியா 1:10 “தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமதுபலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமதுஜனங்களும் இவர்கள்தானே”

ஆண்டவரின் விசுவாசத்தையும் வல்லமையையும் பற்றிய சாட்சிகளால் இந்த வார்த்தை நிறைந்திருக்கிறது. உங்கள் விசுவாசத்தை தூண்டவும், ஆண்டவருடைய நற்குணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை உங்கள் இதயத்தில் பின்தொடரவும், அவருடைய நன்மை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படையானதைப் பார்க்கும் வரை நீங்கள் விலகமாட்டீர்கள்!