English Translation

என் எஜமானனுக்கு, அவருடைய சித்தத்தின்படி கனி கொடுப்பதே என்னுடைய மிகப் பெரிய விருப்பமாகும். அதிகமாக கனி கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மரத்தின் வேண்டுதலாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட கனி கொடுத்தலின் மத்தியில் தேவனின் அன்பின் மேல் உள்ள விசுவாசத்தின் அஸ்திபாரங்களை அசைக்கக்கூடிய தாக்குதல்கள் சிலசமயம் நம் வாழ்வில் வருவதுண்டு. உங்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால், இந்த பக்கத்தை படித்து முடிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் – இந்த செய்தி உங்களுக்காகவே கொடுக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன் – இது ஒலிவப் பழத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.

தனித்தன்மை உடைய ஒலிவ பழங்கள் பழுப்பதற்கு அவை உருவாகும் போதே நல்ல வெப்பமான சூழ்நிலை தேவைப்படுகிறது. வரட்சியான பிரதேசங்களில் வளர்ந்தாலும் இவை தங்கள் சூழ்நிலையும் மீறி நன்றாக வளர்கின்றன. அக்டோபர் மாதத்தின் முடிவில், வெப்பம் குறையும் போது இவை தன் எஜமானனால் பறிப்பதற்கு ஏதுவான பக்குவம் பெறுகின்றன. இந்த வெப்பமான காலத்தில் முழு அளவில் வளர்ச்சி பெற்று நல்ல பச்சையான நிறத்தை பெறுகின்றன. பின்னர், பறிக்கப்பட்ட ஒலிவப் பழங்கள், குப்பைகள் நீக்கப் பட்டு கழுவப்படுகின்றன. தேவையில்லாத பொருள்களை நீக்குவதற்காக இவை கைகளினாலேயே சுத்தம் செய்யப்படுகின்றன. இதுதான் ஒலிவ எண்ணெயின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.

olive-1

இவை கழுவப்பட்டவுடன், அரைக்கப்படுவதற்க்காக பெரிய கற்கலுள்ள அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நன்றாக வளர்ந்திருந்த இந்த ஒலிவப் பழங்கள் அரவை இயந்திரத்தால் கூழாக ஆகும் வரை அரைக்கப்பட்டு பின் எண்ணெய் பிழியும் இயந்தரத்திற்க்குள் செலுத்தப்படுகின்றன. இந்த ஒலிவக்கூழ் நன்றாகக் கலக்கப்பட்டு பின் எண்ணெய் பிரிக்கப்படுவதற்க்காக தயார் செய்யப்படுகிறது. பின் இவை எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்பு எண்ணெய் இந்தக் கூழில் இருந்து பிரிந்து வடியும்.

olive-2

திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படும் இந்த ஒலிவ எண்ணெய், தன வாழ்வை குப்பியில் அல்ல, தன் அழகான சுயம் நொறுக்கப்பட விட்டுக்கொடுத்தலில் தான் துவங்குகிறது.

உண்மையைக் கூற வேண்டுமானால், வாழ்கையின் சாதகமான சூழ்நிலையில் அல்ல உடைக்கப்பட்டு நொறுக்கப்படும் சூழ்நிலைகளில் தான் நம்முடைய சிறந்த சாரங்கள் வெளிப்படுகின்றன. இதற்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் எவ்வளவு போராடுகின்றோமோ, அவ்வளவு கடினமாக இதை மாற்றுகிறோம்.

கையாளுவதற்கு கடினமான நிராகரிப்புகளை சந்தித்த ஒருவருக்கு ஆலோசனை கொடுத்ததை இப்போது நினைவு கூறுகிறேன். அவர் தனக்கு இரண்டு வழிகள் இருப்பதாகக் கூறினார். ஒன்று, இந்த பிரச்னையில் இருந்து கோபத்தோடும், கசப்போடும், கையாளுவதற்கு கடினமானதாக இதை மாற்றிக்கொண்டு வெளியேறலாம். மற்றொன்று, தேவனுடைய கரங்களில் சரணடைந்து, தேவனுடைய ஞானத்தினால் நிரப்பப்பெற்று, தேவனுக்கு உபயோகப்படும் விதத்தில் உருவாகலாம்.

மனிதனாக இருப்பதினால், சில சமயங்களில் சில முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒரு மணித்துளிகள் தயங்கி, “ஏன் ஆண்டவரே?”, “ஏன் இப்படி”, “ஏன் நான்”, “நீர் எப்படி இவ்வாறு செய்யலாம்”, என்று கேட்பதுண்டு. அவ்வேளைகளில் ஆவியானவர், பிழியப்படுவதினாலேயே ஒலிவ எண்ணெய் உருவாகிறது என்பதை எனக்கு நினைவு படுத்துவார். பின்னர் இந்தக் கேள்விகளுக்கு பதிலாக நன்றியுள்ள இருதயத்தோடு “நீர் மாறாதவர், என்னை விட உமக்கு நன்றாகத் தெரியும், இதை கடப்பதற்கு எனக்கு உதவி செய்யும், வேதாகமத்தில் உள்ள யோபுவைப்போல் உம்மை துதித்து தொழுதுகொள்ள எனக்கு உதவி செய்யும்” என்று கூறுவேன்.

தன் தாயாரின் உடல் நலக்குறைவுக்கு காரணமானவள் என்று தவறாகப் பழி சுமத்தப்பட்ட ஒரு இளம் பெண்ணோடு பேசிக் கொண்டிருந்ததை நினைவு கூறுகிறேன். அவள் சந்தித்த வலிகளும், கேவலங்களும் அவளுடைய பண்புகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன என்று அவள் கூறினாள். அவள் தன் காயங்களை தேவனுடைய பிரசன்னத்திற்கு எடுத்துச் சென்றபோது தேவன் அவளை தாழ்மையினால் நிறைத்தார். நெருக்கப்படுவது உங்கள் இருதயத்தில் மாற்றுவது மட்டுமல்ல தேவனிடத்தில் சமர்ப்பிக்கும் போது உங்களை பிரகாசிக்கும் முத்தாக மாற்றுகிறது.

புதிய ஏற்பாட்டில் காணும் இந்தப் பெண்ணைப் போல், தைலக் குப்பியை உடைக்கும் போது அதின் நறுமணம் அந்த வீட்டையும் தாண்டி பரவுகிறது. தேவனுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் நிற்பதனால், பல உடைக்கப்பட்ட சூழ்நிலைகளையும், குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். என் தனிப்பட்ட அனுபவங்களில் கண்டது என்னவென்றால், இந்த சூழ்நிலைகளை தேவனுக்கு முன்பாக துதியோடு எடுத்துச் செல்லும் போது, அவர் பெரிய காரியங்களை செய்யமுடியும்.

430 வருடங்கள் அடிமைத்தனத்தில் இருந்ததினாலேயே அபிஷேகம் பெற்ற மோசே பிறந்தார். மல்கியாவிற்க்கும் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் நடுவில் 400 வருடங்கள் இடைவெளி இருக்கின்றன. உங்களுடைய உடைக்கப்பட்ட சூழ்நிலையும், உதவியற்ற சூழ்நிலையும் ஒரு பெரிய நோக்கத்திற்கும் அபிஷேகத்திற்கும் நேராக உங்களைக் கொண்டு செல்லும். ஏன் நீங்கள் இப்பொழுதே உங்கள் முழு இருதயத்தோடு தேவனை துதிக்க ஆரம்பிக்கக் கூடாது?

உங்களுக்காக ஒரு வார்த்தை, என் வாழ்கையின் பெரிய தேவைகளுக்கு மத்தியில் என்னை நடத்தும் இந்த செய்தியோடு இந்த பதிவை முடிக்க விரும்புகிறேன். தேவன் மாத்திரமே எப்பொழுதும் நம் மாறாத உதவியாக இருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும், தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங் 46: 1-7

கேள்வி: உடைக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? எந்த வசனங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன?