அலுவலக அழுத்தங்களைக் கையாள்வதெப்படி

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

January 31, 2014

[English Translation] [French Translation] [Spanish Translation]

இதை எதிர்கொள்வோம்! வாழ்க்கை எப்பொழுதும் சுலபமாக இருப்பதில்லை. நாம் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், இன்னும் கடினமாகத் தான் இருக்கிறது. ஒரு குடுவையில் உள்ள மீனைப் போல் உணர்கிறோம். எல்லோரும் நம் நடக்கையும் பேச்சுக்களையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். சரியில்லாத உலகத்தில் சரியாக வாழ வேண்டும் என்கிற விருப்பம் பல நேரங்களில் அர்த்தமில்லாததாகதான் தெரிகிறது, முக்கியமாக நம்மை சுற்றி இருப்பவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாமல் இருக்கும்போது.

messy-office-03

அலுவலக அழுத்தங்களைக் கையாள சில வழிகள் இதோ

யதார்த்தத்தை எதிர்பாருங்கள்

நல்லது, உண்மை என்னவென்றால் ஆதாம் விழுந்து போனதிலிருந்து அவதூறு சொல்வதும், நியாயகேடாக நடப்பதும், பொய் சொல்வதும், மற்றவரின் உயர்வின் மேல் பொறாமை கொள்வதும், உங்களின் நினைவுக்கு வருகிற மற்ற எல்லா கேட்ட காரியங்களையும் செய்வதுமாக மனிதன் மாறிவிட்டான். அதனால், தெய்வ பயம் அரிதான உலக வாழ்வினுள் சென்று எல்லாக் காரியங்களும் நியாயமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது நிறைவேறாத எதிபார்ப்பாகும். தேவனுடைய பிள்ளையான நீங்கள், உங்கள் வேலையை விட முடிவு செய்யும் முன், இவ்வகையான சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு

யதார்த்தமாய் யோசிப்போம். உங்கள் பணி முதல்வர், உங்கள் மேலாளர், உங்கள் உடன் வேலை செய்பவர்கள்; ஆகிய எல்லோருக்கும் அவர்கள் வாழ்வில் சில பிரச்சினைகள் உள்ளன. இதில், இருதயத்தில் நம்பிக்கை உள்ளவர் ஒருவர் இருப்பாரானால் தேவனை உங்கள் இருதயத்தில் கொண்டிருப்பதனால் அது நீங்களாகத்தான் இருக்கும். உங்கள் சந்தோஷம் இந்த உலகத்தின் காரியங்களில் இல்லாமல், நித்திய ஜீவனில் உள்ளது. உங்கள் பணி முதல்வருக்கு அவர் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்; அல்லது உங்கள் மேலாளருக்கு மற்றவர் செய்த வேலை சரியாக இல்லாததினால் உள்ள கோபமாக இருக்கலாம், இவ்வாறான சமயங்கள் அவர்களை ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு மற்றவர்களை புரிந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு அவர்களை புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைகின்றன.

உங்கள் இருதயத்தை சோதனை செய்யுங்கள்

நீங்கள் உண்மையாக கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், ‘என் இருதயம் இங்கு தான் உள்ளதா?’ நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை முழு மனதுடன் செய்தால் உங்களின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை ரசித்து செய்யவில்லை என்றால், அதை தவறாக செய்வதற்கு ஏதாவது காரணமாக அமைந்துவிடும். பின் நீங்கள் உங்களைக் கேட்க வேண்டிய கேள்விகள் என்னவென்றால்:- ஏன் ஏன் இருதயம் இதில் இல்லை? – நீங்கள் செய்ய விரும்பாததை செய்து கொண்டிருப்பீர்களானால், நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு எனென்ன சாத்தியங்கள் இருக்கின்றன?- தேவன் இங்கு என்னை ஒரு நோக்கத்திற்காக வைத்திருக்கிறாரா? அப்படியென்றால் அந்த நோக்கம் என்ன? அவர் நோக்கம் நிறைவேறுவதற்கு நான் என்னை எவ்வாறு மாற்றிக் கொள்ளவேண்டும்?

பிரச்சினை உங்களிடமா?

இதை செய்வதற்கு நீங்கள் விரும்பாதிருக்கலாம் ஆனால் நீங்கள் உங்களிடமே, ‘பிரச்சினை என்னிடமா?’ என்று கேட்கவேண்டும். சிலருடன் வேலை செய்வது கடினமான காரியமாகும். நீங்கள் அப்படிப் பட்டவரா என்று அறிந்து கொள்வதற்கு, உங்களை நீங்களே தாழ்த்தி பிரச்சினை உங்களிடம் தானா என்று அறிந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நீங்களும் பங்களிக்கிறீர்களா? நீங்கள் அப்பாவியாக இருந்தும் குற்றம் சாட்டப் படுகிறீர்களா? மனக் குறைவுகள் அதிகமாவதற்கு நீங்கள் செய்யும் ஏதாவது காரணமாகிறதா? உங்கள் உடன் வேலை செய்பவர்களிடம் இதை குறித்த அவர்களது உண்மையான கருத்தை கேளுங்கள், அவர்கள் யதார்த்தமாக பதிலிறுத்தால் அவர்கள் மேல் கோபப் படாமல் இருங்கள். அவர்கள் ஆம் என்று கூறுவார்கள் எனில் அதை ஒத்துக் கொள்ளுங்கள். உங்கள் மேலாளரோடு இதை குறித்து வெளிப்படையாக விவாதித்து, நீங்கள் எதில் குறைவு படுகிறீர்களோ அதை ஒத்துக் கொள்ளுங்கள். மனிதர்கள் தேவன் அல்ல அதனால் நீங்கள் செய்ததை மன்னிப்பதற்கும் மறப்பதற்கும் அவர்களுக்கு அதிகமான அவகாசம் தேவைப் படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை குறித்து கவலை கொள்ளாமல், இன்று என்ன செய்யமுடியுமோ அதை நன்றாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். எதையாகிலும் நன்றாகக் கையாள்வதற்கு உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அதை கற்றுக் கொள்வதற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள். நீங்கள் அதிக ஆர்வமாக உங்கள் வேலையை செய்வதின் மூலமாக, நீங்கள் சுமந்து செல்லும் இயேசுவின் நாமம் மகிமைப் பட முடியுமா?

முற்போக்கான சிந்தனையை தொலைத்து விடாதீர்கள்

பிரச்சினையின் எல்லா கோணங்களையும் கருத்தில் கொண்டு யோசிப்பது அதை தீர்க்க உங்களுக்கு உதவும். இயற்கையான எல்லா சவால்களுக்கும் மேலே, பிரச்சினையின் மையத்தில் நீங்கள் இருப்பதனால், மற்றவர்கள் செய்வது மிகவும் நியாயக் கேடாக உங்களுக்கு தெரியலாம். உங்கள் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் உங்களை இழக்கச் செய்வதற்காகவே பிசாசு உங்கள் பணியிடத்தில் பிரச்சினை உண்டுபண்ணுவான். இதை சமாளிக்க தேவையில்லாத பிரச்சினைகள் உங்கள் பணியிடத்தில் வராமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மிகச் சரியான செயலை செய்யும் முன், ஒரு அடி பின் எடுத்து ஜெபியுங்கள். உங்கள் சந்தோஷம் தொலைந்து விடாதபடிக்கு உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணப் பையோ உங்கள் பணி உயர்வோ அல்லது மற்றவர்களோ உங்கள் சந்தோஷமாக இல்லாதபடிக்கு தேவனுக்குள் உள்ளதே உங்கள் சந்தோஷமாக இருப்பதாக.

ஆவிக்குரிய பிரச்சினை

பல நேரங்களில் உங்களுக்குள் இருக்கும் தேவ ஆவியோடு அந்தகாரத்தின் ஆவிகள் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். நீங்களே செயல் படுவதற்கு ஆரம்பிக்கும் முன், இதில் போராடுகிற ஆவிகளை முழங்காலில் நின்று ஜெயித்து விடுங்கள். உங்களுக்கு உள்ள தடைகளை காண்பிக்கும் படி தேவனிடம் கேளுங்கள். தேவனிடம் ஞானமும் கிருபையும் கொடுக்கும்படி கேளுங்கள். எல்லாவற்றுக்கும் மேல், தேவன் உங்களுக்கு வழியை காண்பிப்பார் என்று விசுவாசியுங்கள். இந்த இடத்தில இருந்து தேவன் உங்களை எங்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார் என்று அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: நீங்களே தனியாக போராடுவீர்களானால் நீங்கள் போராடி முடிக்கும் வரை தேவன் செயல் படாமல் காத்திருப்பார்.

நீதிமொழிகள் 21: 1 இல் உள்ள ஒரு வல்லமையான வசனம் கூறுகிறது, “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.” இப்படி இருக்குமானால், உங்கள் மேலாளர் மற்றும் உந்தன் பணியாற்றுவோரின் இருதயமும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன. நீங்கள் செயல் படவில்லை என்றால் தேவன் செயல் பட முடியாது. பெலனடயுங்கள், தேவனால் கூடாதது எதுவுமில்லை.

அமைதியாக செயலாற்றுவதற்கு சில யதார்த்தமான வழிகள்

நீங்கள் ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கும் போது, நீங்கள் நடைமுறைகேற்றபடியும் நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பிசாசின் மேல் சாட்டிவிட்டு பிரச்சினையை குறித்த சரியான அறிவு இல்லாமல் இருக்காதீர்கள். நீங்கள் இப்பொழுது ஒரு யுத்தத்தில் இருப்பதனால், சரியான முடிவுகளை எடுங்கள். நேரம் மிகவும் முக்கியமானதினால் உங்கள் வேலைகளை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்துங்கள். தேவை பட்டால் ஒரு புத்தகத்தில் அவைகளை குறித்து வையுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுக்கு அதிகாரம் இருந்தால் சில வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படையுங்கள். செய்து முடிக்கமுடியாத அளவிற்கு வேலைகள் உள்ளனவா என்று சரிபாருங்கள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்த என்ன செய்யப் போகிறீர்கள் மற்றும் பிரச்சினைகளை கையாள என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள் என்று குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளனவா? உங்கள் இலக்குகளை அடைய திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்.

மேலும், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே அதிகமாக அழுத்தத்திற்குள்ளாக்காதீர்கள். நிகழ் காலத்தில் உங்கள் மனதை வையுங்கள். சோர்வை தடுப்பதற்கும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இந்த சவால்களை சந்திக்க உங்களுக்கு வழிகாட்டும் ஒருவரை கண்டு பிடியுங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லாம், இடைவெளிகளின் போது கூட வேதத்தை வாசிக்க வேண்டும் என்று நான் கூறவேண்டியதில்லை (நீதிமொழிகளை அதிகம் வாசியுங்கள்). சுருக்கமாக, எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் ஒன்றான ரோமர் 8:28 கூறும்படி, “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

கேள்வி: உங்கள் பணியிடத்தில் உள்ள யுத்தங்களை கையாள நீங்கள் பயன்படுத்தும் யுத்தி என்ன? நீங்கள் இதனோடு கூடும் படியான காரியங்கள் உள்ளனவா? இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.