சில நேரங்களில் நம்முடைய வாழ்கையில் நம் மணோபாவத்தையும் உணர்ச்சியையும் சவால் விடுகிற சூழ்நிலை வருகிறது. ஆண்டவர் மனிதர்களிடத்தில் தோன்றினபோது, “பயப்படாதே, திடமனதாயிரு, என்று சொல்லுவதை வேதத்தில் அநேக முறை பார்க்கிறோம். அவருடைய உயிர்தெழுதலுக்கு பிறகு அநேக முறை சீஷர்களிடத்தில் அவர் வெளிபட்டுள்ளார்.

நம்மை சந்திபதில் அவர் சோர்ந்து போவதில்லை. தன் பிள்ளைகளை ஆசீர்வதிபதில் அவர் சோர்ந்து போவதில்லை. யாக்கோபு:4:8 சொல்லுகிறது, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.”

நம்முடைய கடமையை செய்து, அவரோடு நெருங்கி வரவேண்டும்.

அநேக நேரங்களில் நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது, அது ஆண்டவரை அடைய தடைசெய்கிறது. நம்முடைய இதயத்தை திகைக்க அல்லது துக்கத்தை தருகிற காரியம் வரும்போது, நம்முடை இதயத்தை அமைதி படுத்தி ஆண்டவரை தேடவேண்டும். நாம் சோதனைகுட் படும்போது, குழப்பம் அல்லது விரக்தி அடைந்து, வலுவான உணர்ச்சிகளினால் பதில் கொடுக்காமல் ஆண்டவருக்கு அதை விட சிறந்த பதில் கொடுக்க வேண்டும். ஒரு விசுவாசமற்ற உணர்ச்சி ரீதியிலான பதில் மூலம் நீங்கள் ஆண்டவரின் இதயத்தை வேதனை படுத்த வேண்டாம்.

நாம் போராடினாலும், முடிவுகளை காணாமல் இருந்தாலும், நம்முடைய இதயம் கொடுக்கம் பதிலினால் நாம் நம் வழியை இழந்து விடக்கூடாது.

நம் ஆண்டவரின் உதவியால் சிந்தனை மற்றும் மனதில் வரும் போராட்டத்தை போராட வேண்டும்.

எதிரியின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தாவீது போராடினான். தாவீதுடைய குடும்பம் கடதபட்ட போதும், அவனுடைய ஜனங்கள் கல் எறிந்து கொல்ல நினைத்த போதும், தாவீது ஆண்டவர்குள்ளாக தன்னைத்தான் பெலபடுத்திக் கொண்டான்.

நாம் தாக்கபடும் போது நம்முடைய இதயம் சோர்ந்து போக விடகூடாது. நம்முடைய விசுவாசத்தினால் நாம் பரலோகத்தில் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய மனதை அவருடைய வார்த்தையால் புதுபிக்கும் போது, நம்முடைய சூழ்நிலைகளில் புதிய ஒரு வெளிபடுதுதலை பெற்றுக் கொள்ள நாம் ஆசீர்வதிக்கபடுகிறோம்.

தோல்வி நம்முடைய எத்ர்காலத்திற்க்கு ஆண்டவர் காட்டும் அன்பாக இருக்கிறது.

சில நேரங்களில் ஆண்டவர் நமக்கு எதிராக இருக்கவில்லை, மாறாக நம் வாழ்கையின் பாதையை மாற்றும் காரியத்தை அவர் தடை செய்கிறார்.

இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.ஆனால் பேதுரு சோர்வடைந்து ஆண்டவரை மூன்று முறை மறுதலித்து மறுபடியும் மீன் பிடிக்க சென்றான். சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி மீன்ப்டிக்கபோகிறேன் என்றான். (யோவான் 21:3)

அவன் நன்பர்கள் அவனோடு சென்றார்கள். அவர்கள் படகில் போனபோது அந்த இரவு ஒரு மீன்கூட அகபடவில்லை. நம்முடைய வலியிலும், குழப்பத்திலும் யாரை நம்மோடு இழுக்கிறோம் என்பதில் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும்.

நம்முடைய இதயம் சோர்ந்து போன நிலையில், நம் நன்பர்களை நம்மோடு சேர்ந்து பாவம் செய்ய இழுத்து போகக் கூடாது. நம் வலியிலும், குழப்பத்திலும் நம் நன்பர்களை நம்மோடு இழுப்பதை  பார்க்கலும் ஆண்டவரிடத்தில் போவது மேலான காரியம்.

பேததுரு அந்த இரவில் மீன் பிடிபதில் வெற்றி அடைந்திருந்தால், ஒவ்வொரு முறையும் அவனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் மூழ்கடிக்கும் போது அவன் மறுபடியும் மீன் பிடிக்க சென்றிருப்பான். அந் த இரவில் மீன்களை தடுப்பதின் மூலம் ஆண்டவர் பேதுருவுடைய வாழ்வில் வெற்றிக்கு வழி வகுத்தார்.

ஓரு மீனும் கிடைக்காததுதான் ஆண்டவர் பேதுருவின் மேல் வைத்த அன்பு.மீன் பிடிப்பதில் வெற்றியை ஆண்டவர் தடுத்ததால், பேதுரு ஒரு சீஷைனாக தொடர்ந்து செயல்பட ஆண்டவர் வழி வகத்தார்.

இயற்கைக்கு அப்பாற்பட்டதான வாழ்க்கை வாழ ஆண்டவர் பேதுருவை அவருடைய கிருபையால் இழுத்துக் கொண்டார்.

அண்டவரே நம் தேவைகளை சந்திப்பவராக இருக்கவேண்டும்.

இந்த தோல்விக்கு பிறகு இயேசு தம்முடைய நன்பர்களுக்கு வெளிப்பட்டார்.

அதிகாலையில் கடற்கறையில் இயேசு தம்முடைய சீஷர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அவர்களை அவர் சந்தித்த போது அவர்களுக்காக காலை உணவாகிய அப்பமும் மீனும் தயாரித்து வைத்திருந்தார்.

இயேசு முதலில் பற்றாக்குறையினிடத்தில் பேசினார். அவர் கேட்டார், “பிள்ளைகளே உங்களுக்கு மீன் இருக்கிறதா?” முதலில் அவர் நம்முடைய தேவையை சந்திக்கிறார். சீஷர்களின் குறையை ஆண்டவரால் மட்டும் தான் நிறைவு செய்ய முடியும்.

கடற்கறையில் நின்று கொண்டிருந்த இயேசுவை பார்க்க முடியாதபடி இருள் அவர்கள் கண்களை குருடாக்கி இருந்தது. திடீரென்று வெள்ச்சத்திலே அவர்களோடு எப்பொழுதும் இருந்த இயேசுவை பார்த்தார்கள்.

கடினமான காலங்களில் மனதில் உள்ள இருளினால் கிறிஸ்து நம் அருகில் இருப்பதை பார்க்க முடியாமல் போகிறது. ஆண்டவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்பதை பார்பதர்க்கு நம் மனைத புதிதாக்க வேண்டும். தெளிவாக பார்க்க நம் மனதை மாற்ற வேண்டும்.

உங்கள் வாழ்வில் எந்த பாதையை ஆண்டவர் தடை செய்திருக்கிறார்? உங்கள் ஏமாற்றங்களில் ஆண்டவரை விசுவாசிக்க முடியுமா? பயம் நம் இருதயத்தில் வரும் போது, எப்பொழுதும் நம்மோடு இருப்பவரை பார்க்க முடியாது.

யோசுவா:1:9  நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதால், நம் எல்லாத் தேவைகளையும் அவர் சந்திப்பார். அது உங்கள் கணவன் அல்லது மனைவியாக இருக்கலாம், பொருளாதார தேவையாக இருக்கலாம், உணர்ச்சியில் விடுதலையாக இருக்கலாம், சுகமாக இருக்கலாம், எதிர்காலமாக இருக்கலாம், எந்த காரியமாக இருந்தாலும் ஆண்டவர் அந்த தேவையை சந்திப்பார்.

சீஷர்களின் தேவையை சந்தித்தது போல உங்கள் தேவைகளையும் சந்திப்பார். அவரே வழியும், சத்தியழும், வெளிச்சமுமாக இருந்து நம் மனதில் தோன்றும் எல்லாக் கண்டனங்களையும் எத்ர்து, அவரை விசுவாசிக்க உதவுவார்.