இதோ இங்கே கனம் பெறுதல் என்ற தலைப்பின் கீழேயுள்ள நமது தொகுப்பின்  4 வது பாகம்.

நாம் நல்ல விசுவாசிகளாக நமக்கு மேல் இருக்கும் அதிகாரங்களை பயபக்தியோடும் மரியாதையோடும் ஏற்றுகொண்டு கீழ்ப்படிய கற்றுக்கொள்ளவேண்டும்.புதிதாக வாகனம் ஓட்டும் கார் டிரைவர்கள் இந்த கொள்கையை அப்படியே பின்பற்றுவார்கள். ஏனெனில் அவபிரககில் வாகனம் ஓட்டும்போது தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக ஓடினால் காவல்துறை தடுத்துநிறுத்தும்போது கீழ்ப்படியாமல்போனால் அதற்கேற்ற விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். உங்கள் மேலதிகாரிகளையோ அல்லது உங்கள் ஊழியக்கரையோ அவமதித்தல் அல்லது கன்வீனப்படுத்தினால் உங்கள் வேலையை இளந்துபோக நேரிடும். விவாகரத்து என்பது தேவன் ஏற்பதில்லை. திருமண வாழ்க்கையை கனவீனப்படுத்துகிறது ஒரு கசப்பான கனியாகும். தேவன் ஏற்படுத்திய சபையின் தலைமை ஸ்தானத்தை அவமதிப்பது, கனவீனப்படுத்துவது ஆலயத்தின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மேலுள்ள நம்பிக்கையை இழந்து அவமதிப்பதாகும்.

கனம் என்பது தேவ சூத்திரம் (பாஷை) பூலோக மக்களுக்கு தேவன் ஏற்படுத்திய ஒழுங்குமுறை சட்டம்.

நீங்கள் மற்றவர்களை கனம் பண்ணுகிற குணாதிசயம் உள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் உங்களை உயர்த்துவார். வேடம் சொல்லுகிறது நீங்கள் மற்றவர்களை கனம் பண்ணுகிறவர்களாக இருந்தால் நீங்கள் இருக்கும் தேசத்தில் உங்கள் ஆயுசு நாட்கள் பெருகும் (யாத் 20:12) நீங்கள் மற்றவர்களை கனவீனப்படுத்துகிறவர்களாக இருந்தால் உங்கள் வாழ்நாட்கள் குருகிபோய்விடும். ஆகவே குணப்படுத்துதல் ஜீவனையும் கனவீனப்படுத்துதல் மரணத்தையும் கொண்டுவரும், உறவுகளை முறித்துவிடும். நமது மதிப்பை இழக்கச்செய்யும். நம்மேல் தேவன் வைத்த நோக்கமும் நிறைவேறாமல் போகும்.

உங்கள் வாழ்க்கையின் ஆசிர்வாதத்தின் வாசல் திறக்கப்படுவது நீங்கள் மற்றவர்களை கணம் பண்ணுகிற உன் குணாதிசயத்தை பொறுத்தது.சாத்தான் உங்களை தூண்டுவான், உங்களை கேலி செய்வான், நீங்கள் கனம் பண்ணுகிற மக்கள் உங்களை வெறுக்க செய்வான். நீங்கள் மற்றவர்களை கனவீனப்படுத்தும்படி செய்து உங்கள் ஆசிர்வாதத்தின் கதுவுகளை மூட செய்வான்.

மற்றவர்களை நீங்கள் கனவீனப்படுத்துவது எப்படி உங்களை பயன்படுத்துவது அன்று சாத்தானுக்கு நன்கு தெரியும்.உன் உள்ளதை சோர்வு பண்ணுவான்.அவ்வளவுதான் மற்றவர்களை அவமதிக்கிற வார்த்தைகள் உன் உதட்டில் இருந்து மிக வேகமாக உரத்த சத்தமாக வரும்.உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட சட்டங்கள் ஒழுங்குமுறைகளை மீறி நீங்கள் சண்டைபோடுவீர்கள்.உங்கள் தலைவர்களை அவமதிப்பீர்கள்.உங்கள் நண்பர்களிடம்மும் இன்னும் அதிகமாக அவமரியாதை செய்யவேண்டும் என்ட்ரி எண்ணி தேவன் உங்களுக்கு திறக்கவேண்டும் என்று விரும்பின கதவுகளை மூடி விடுவீர்கள், வீண் பேச்சுகள், வம்பு, பரியாசம் இவைகள் சாத்தானின் கைவந்த கலைகள். பிறரை அவமதிக்ககூடிய சாத்தானின் எல்லா செய்கைகளையும் விட்டு விலகுங்கள்.

நீங்கள் மேற்கூறிய ஆலோசனைகளுக்கு செவிகொடுத்து தேவா கிருபையை காத்துகொள்ளப்போகிறீர்களா?

நீங்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக கணத்திற்கூறிய மற்றவர்களை காணப்படுத்துகிற வாழ்கை வாழ்ந்தால் உங்கள் நீதி நியாயம் கர்த்தருக்கு முன்பாக வரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடி வாசல்கள் திறக்கப்படும்.

எளிதோ கடினமோ ஒரு கணத்திற்கூறிய பத்திரமாய் இருங்கள். நீங்கள் அரசாங்கத்தை கனம் பண்ணினால் தவறாக வரிவித்தாலும் அரசாங்கம் உன்னை ஆசிர்வதிக்கிறதில்லை. கர்த்தரே உன்னை ஆசிர்வதிக்கிறவர். கர்த்தர் உன் தாழ்மை குணத்தை  பார்த்து உன்னை ஆசிர்வதிக்க இறங்கி வந்து விடுவார்.

யோசேப்பை பற்றி பார்ப்போம். அதி 40:23 இன் படி பார்வோனின் பணபத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். அதனால் யோசேப்பு மேலும் இரண்டு வருடம் சிறைச்சாலையில் இருக்க வேண்டியதாயிற்று. 

நீங்கள் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய நபர் உதவி செய்ய மறந்துவிட்டால் உடனே மன மடிவாகிவிட்டது. அது நமது ஆவிக்குரிய முதிர்ச்சியற்ற தன்மையை குறிக்கிறது. கர்த்தர் நமக்கு உதவி செய்ய மனிதர்களை உபயோகப்படுத்துவர். கர்த்தர் உங்களுக்கு உயர்த்துவதற்கு உதவி செய்யும்படி ஆட்களை அனுப்புவார். ஆனாலும் அப்படி மனித உதவ காணப்படாமல் போனாலும் சோர்ந்து போகக்கூடாது. உங்களை நேசிக்கிற உங்கள் கர்த்தரிடத்தில் உங்களை முற்றிலுமாக சமர்ப்பித்து விடுங்கள்.கரங்களை நம்பி விசுவாசியுங்கள்.

யோசேப்புக்கு இது ஒரு பரீட்சை காலமாக அமைந்தது. யோசேப்பு பணபத்திரக்காரர் தலைவன் சிறைச்சாலையைவிட்டு போகும்போது நீ அரண்மனை சென்றபின் என்னை நினைத்துக்கொள் என்று சொன்னான்.

யோசேப்பின் முதல் தவறு கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பதற்கு பதில் மனிதன் மேல் நம்பிக்கை வைத்தான்.

ஒருவேளை யோசேப்பை போல் யாரோ ஒருவர் உதவி செய்வதினால் நீங்கள் அவர்கள் மேல் கசப்பு உணர்ச்சியுடன் கோபப்பட்டிருக்கலாம்.கர்த்தரோ அப்படி உதய் செய்ய கூடியவர்களை மறக்கப்பண்ணியிருந்தால் உங்களுக்கு  ஏன் அந்த  நபர் மேல் கோபம் வருகிறது. ராஜாவாகிய சாலமோன் நீதி 21:1 எழுதி இருக்கிறார். ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் இருக்கிறது. அதை தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். பிசாசானவன் உங்கள் வாழ்க்கையின் மேல் தேவன் ஏற்படுத்தி வைத்த அதிகாரங்களை எதிர்க்கவைக்க அவன் பிரியப்படுகிறான்.

ஆகவே அதிகாரங்களை எதிர்ப்பதை நிறுத்துங்கள்.

ராஜரீக கலையையும் உயர்வதர்கான சூத்திரத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.அதிகாரங்களை கனம் பண்ணு. உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியுங்கள்.அவரே ராஜாவின் இருதயத்தை உங்களுக்காக அவர் சித்தத்தின்படி திரும்புவார்.இதோ ராஜாவின் இருதயத்தை திருப்பக்கூடிய  3 திறவுகோல்.

1. கேள்:  என் நீர்க்கால்கள் வேறு திசை நோக்கி திருப்புகின்றது அந்த நீர்க்கால்கள் உன் பக்கமாக வராமல் திரும்பி போவதற்கு எதாவது தடை செய்கிற காரியங்கள் உங்களில் இருக்கிறதா?

சோதித்துப்பார் என்னென தடை சக்திகள் தடைக்கற்கள் நீர்க்கால்கள்  உங்கள் பக்கமாய் பாய்வதற்கு தடையை இருக்கிறதா? உன் மேல் தேவ தயவு வர என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து கொள். தானியேல் தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று  அறிய உபவாசம் பண்ணினான். 21 நாட்கள் செய்ய வேண்டியதை தேவனிடமிருந்து அறிந்து கொள்ள உபவாசிதான்.  நெகேமியா அப்படியே செயதான். தேவா அறிவு தேவா சமுகத்தில் தரித்திருப்பதின் மூலம் வந்தவுடன் தேவா தயவை தடைசெயகின்ற தடைக்கற்களை அகற்றிவிடுங்கள்.

2. நீர்க்கால்கள் உங்கள் பக்கமாக திரும்பும் படி ஆழமாக தோண்டுங்கள்.

தோண்டும்போது தண்ணீர் முதலில் குறைவாகத்தான் வந்து கொண்டிருக்கும். தாழ்மை என்ற  சுபாவம் மிக முக்கியமான ஒன்று. உயர்வுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணுகிறீர்களா. அப்பொழுதான் நீங்கள் ஆயத்தம் இல்லாமல் இருக்கிறீர்கள். ஆகவே உங்களை தாழ்த்திகொண்டே இருங்கள். உங்கள் ஆசிர்வாதத்தை அடித்தளத்தின் வேலையை தோண்ட ஆரம்பியுங்கள் தாழ்மையினால். அப்பொழுது தயவு என்ற நீர்க்கால்கள் தானாகவே பாய ஆரம்பிக்கும். 1பேதுரு 5:6யின் படி கர்த்தருக்கு முன்பாக தாழ்மைபடுங்கள் கர்த்தரின் பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

3. பரிசுத்தமாக வாழ ஆரம்பியுங்கள்.

ஏன்னென்றால் சுத்த இருதயத்தை விரும்புகிறவரிடத்தில் ராஜா பிரியப்படுவர். சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள். ராஜா அவனுக்கு சிநேகிதனாவான் என்று வேதத்தில் எழுதியிருக்கிறது.
நங்கள் ராஜாவின் கைகளையே நோக்கி பார்ப்பதில் தீவிரமாக இருக்கிறீர்களா? ராஜாவின் திருமுகத்தை பார்க்க மறைத்துவிடீர்களா?

சுத்த இருதயம் இனிமையான உதடுகளின் வார்த்தை தரும். ராஜா உங்களை நண்பர்களாக அழைக்க உதவும். உங்கள் சுத்த இருதயத்தை தேவன் பார்க்கும்போது கர்த்தர் ராஜாக்களின் இருதயத்தை உங்கள் பக்கமாக திரும்புவார். ராஜா உங்கள் கனிவான வார்த்தைகளை கேட்டு உங்களை ஆதரிப்பார். ஆகவே ங்கள் வழிகளை மாற்றுங்கள். கர்த்தர் உங்களுக்கு மேல் ஏற்படுத்தின ராஜாவை உங்கள் கனிவான வார்த்தைகளினாலும், சுத்த இருதயத்தோடும் கனப்படுத்தினால் உன் மேல் ஆசீர்வாதங்கள் கடந்து வரும்.

மற்றவர்களை கனப்படுத்துகிற உங்கள் இனிய பயணத்தில் நீங்களும், நீங்கள் இந்த தொகுப்பை பகிர்ந்து கொள்ளுகிற மக்களும் ஆசிர்வாதத்தினால் நிறைந்திருப்பீர்.

இந்த கனம் பெறுதல் என்ற தொகுப்பில் உள்ள இந்த பகுதியையும் மற்றவர்களிடம் பகிர்துகொள்ளுங்கள். இந்த தொகுப்பு மற்றவர்களுக்கும் சென்றடைவதாக.