ஆவியானவரை போல அசைவாட ஐந்து விசைகள் – பகுது 5/5: நீங்கள் யார் என்று அறிந்துகொள்ளுங்கள்

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

November 13, 2018

நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் எப்படிப்பட்ட வல்லமையை உடையவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசியர் 1:7
நீங்கள் ஆம் என்று தலையை அசைக்கலாம் ஆனால் நெருக்கம் வரும்போது நம்பிக்கையில் நிலைநிற்கிறீர்களா அல்லது விரக்தியில் தலையை தொங்கவிடுகீர்களா.

ஆவியானவர் அசைவாடும்போது தேவனுடைய சத்தத்தை நாம் கேட்க முடியும். நம்முடைய தேவன்மேல் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளில் நம் குழப்பங்களை பார்காதபோது , பரலோகம் பூமிக்கு வருகின்றது.

ஆவியானவரை போல அசைவாடா முக்கியமான திறவுகோல் உங்கள் அடையாளத்தை புதுப்பிப்பதே.

காற்று மற்றும் அலைகள் வந்தபோது இயேசு படகில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அவர் அறிந்திருந்தார், மேலும் அவர் வழிகளில் சிக்கல்கள் அல்லது சோதனைகளை வந்தபோது அதை கண்டு பயப்படவில்லை.
நாம் இயேசுவை போல இருக்கவேண்டும். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும், உங்களைச் சுற்றி இருக்கும் குழப்பங்களால் பாதிக்கப்படுவதை எதிர்த்துநில்லுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதை உணரவேண்டும்.

நீங்கள் ஒரு பிரச்சனையால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அந்தப் பிரச்னையில் மூழ்கிவிடாதீர்கள், அதற்குப் பதிலாக நீங்கள் யார் என்பதை அறிந்த புரிதலுடன் பிரச்சனையிலிருந்து உங்களை துண்டிக்கவும். பிரச்சனை மீது அதிகாரம் எடுத்து, நான் இதில் இருந்து வெளியே வருகிறேன் என்று அறிக்கையிடுங்கள்.

நாம் உலகத்தில் உள்ளவர்களை போல் இல்லாமல் நமக்குள் இருக்கும் வல்லமையை அறிந்து பிரச்னை வரும்போது சமாதானத்தில் நடக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

நான் ஒரு கனவு கண்டேன்: அதில், சாத்தான் ஒரு பெரிய மலையில் நின்று கொண்டிருந்தான். மலையின் அடிவாரத்தில் அந்த மனிதன் நின்றுகொண்டிருந்தான். சாத்தான், அவனை நோக்கி “எனக்கு உன் மனதை கொடு!” என்றான். எதிரி வெற்றி பெறுவது போல தோன்றியது. எனினும், மனிதன் மெதுவாகவும் கவனமாகவும் சாத்தானை நோக்கி நான் என்ன சிந்தனையை ஒருபோதும் உன்னிடத்தில் கொடுக்கமாட்டேன் என்று கூறினான்.

அன்பானவர்களே எதிரி எப்போதும் உங்கள் சிந்தனையை தங்குவான். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி உங்கள் மனதில் பயம் இருந்தால், நீங்கள் அதில் இருந்து வெற்றி பெற மாட்டீர்கள். உங்கள் உண்மையான அடையாளத்தில் செயல்பட உங்கள் மனதை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். எதிரிக்கு உங்கள் மனதை கொடுக்காதீர்கள்!

தானியேலை கவனியுங்கள். அவர் தனது கைகளில் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்தன ஆனாலும் அவன் அவனுடைய நிலைப்பாட்டை இழக்கவில்லை. சொல்லப்போனால், ராஜ்யத்தின் ராணி ராஜாவிடம் தானியேலை குறித்து குறிப்பிடுகிறார். ஒரு அடிமையாக இருந்தபோதிலும், தனியேலுக்கு மிக உயர்ந்த மரியாதை இருந்தது. (தானியேல் 5)

தனியேலுக்குள் இருந்த ஆவி அவனை மற்ற எல்லாரை காட்டிலும் மேலோங்கி நிற்கச்செய்தது.பெரிய ஆபத்து உங்கள் கையில் சங்கிலிகளால் இருப்பதினால் அல்ல , உங்கள் மனதில் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருப்பதுதான். பிரியமானவர்களே, நீங்கள் குழியிலே தள்ளப்படலாம் ஆனால் கடவுளின் கிருபை உங்களை வெளியே கொண்டுவரும். சிறைச்சாலையில் கூட, தேவனுடைய கிருபை உங்களை உயர்த்தும்.

நீங்கள் கடவுளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.பரிசுத்த ஆவியானவரை போல அசைவடா முக்கியமான திறவுகோல் எது என்றால் நீங்கள் யார் என்பதை நீங்கள் உணர வேண்டும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள், நீங்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள், என்பது மிக அவசியமானது.

பிரியமானவர்களே, உங்களுள் உள்ள ஆவியின் மூலமாக தேவனுடைய குரலை கேட்டகலாம். தானியேலைப், எல்லா செல்வங்களையும் நிராகரித்து, தேவனிடம் எப்படி அணுகுவது என்று அறிந்திருந்தார். பரிசுத்த ஆவியானவரைப் போல நாமும் அசைவடி! எப்போதும் தேவன் இந்த உலகத்தில் நம் மூலம் மகிமைப்படுத்தப்படட்டும்!