[Spanish Translation] [English Translation]
தேவனோடு நிலையாக நடப்பதுதான் அனேக வாலிபர்களுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள மிகபெரிய சவாலாகும். சில வேளைகளில் உறுதியாக இருந்த நீங்கள், ஒரு சில சமயங்களில், முக்கியமானவைகளல்ல என்று நீங்கள் நன்குணர்ந்த காரியங்களினால் தேவனை விட்டு பின்வாங்கி விடுகிறீர்கள்.
இளம் வாலிபர்களும், மற்றவர்களும் ஏன் நானும் கூட முக்கியமில்லாத சிறிய காரியங்களினால் எதிரி நம்மை மேற்கொள்ள பல வேளைகளில் அனுமதிக்கிறோம். நம்மை கீழே விழத் தள்ளுவதுதான் அவனுடைய வேலையாக இருக்கிறது. பல வேளைகளில் பெரிய ஆயுதங்களை உபயோகிக்காமல் சிறிய எண்ணங்களையே நம்மை கீழே தள்ளும் படியாக உபயோகிக்கிறான். தேவனுடைய பிள்ளைகளான நாம், இதை உணர்ந்து நம் இருதயத்தையும் மனதையும் தொடர்ந்து புதிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
தன்னை நடத்துபவரால் தளர்வடையச் செய்யப்பட்ட ஒரு நண்பரோடு சற்று முன்னர் தான் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு முறை என்னுடைய ஒரு இளம் நண்பர், தான் ஜெபிக்க நினைக்கும்போதெல்லாம் அவருடைய பெற்றோர்கள் கூறும் சொற்களால் எரிச்சலடைந்து ஜெபிக்க முடியாமல் போவதாக கூறியிருக்கிறார். இவைகளெல்லாம் நம் வாழ்வின் பெரிய பிரச்சினைகளாகத் தெரிந்தாலும் இவைகள் நம் கவனத்தை நம் சிருஷ்டிகரிடமிருந்து திசை திருப்புவதற்கு எதிரி பயன்படுத்தும் தூண்டில் இரைகள் தான் என்பதை பல சமயங்களில் நாம் உணர்ந்து கொள்வதில்லை. தேவனோடு நீங்கள் நடக்கும் நடையை எதிர்த்தே எதிரி போராடுகிறான். உங்களை விழத் தள்ள அவனுடைய எல்லா சக்திகளையும் பிரயோகிப்பான். இவ்விதமான பிரச்சினைகள் நம்மை மேற்கொள்ள நாம் இடம் கொடுக்கும் போது, தேவனோடு நடக்கும் நடையில் நாம் தொய்வடைந்து போகிறோம்.
பிரியமான நண்பரே, நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தேவன் நம்மிடம் இருந்து விலகிகொள்ளவில்லை, நாம் தான் இந்த உலக கவலைகளினாலும், பாரங்களினாலும் அவரை விட்டு விலகியிருக்கிறோம். எதிரியின் தந்திரம் என்னவென்றால், நம் கவனத்தை நம்முடைய வழிகள், காயங்கள், பிரச்சினைகள், கவலைகள் ஆகியவற்றின் மேல் திருப்பி, நம் கவனத்தை தேவன் மீதிருந்து விலகச் செய்ய வேண்டும் என்பதே. வளர்ந்த கிறிஸ்தவர்களான நாம், எதிரியின் இப்படிப்பட்ட சிறிய தந்திரங்களை நம்மை மேற்கொள்ள விடாமல், தேவன் தம்முடைய பிரசன்னத்தினால் நம் வாழ்வை நிரப்ப இடம் கொடுக்க வேண்டும்.
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். 2 கொரி 5:15. தேவன் தான் நம்முடைய மாறாத உதவியாயிருக்கிறார். தேவனை நேசிக்கும் வரை எல்லாக் காரியங்களும் நம்முடைய நன்மையாக மாறும். அதனால் என் எதிரியை தேவனோடு நடக்கும் நம்முடைய நடையை பாதிக்க அனுமதிக்க வேண்டும்? சோர்வுற்றவராகவோ தளர்வடைந்தவராகவோ நீங்கள் இருப்பீர்களானால், இப்பொழுதே பரிசுத்த ஆவியானவரிடம் சென்று உங்கள் மனதை ஆளுகை செய்யும் படியாக ஒப்புக்கொடுத்து, உங்கள் பாரங்களை தேவன் மேல் வைக்கும்படியாக உங்களை உற்சாகப் படுத்துகிறேன். ‘சோதிக்கப் பட்டபின் ஏசுவுக்கும் உதவி செய்ய தூதர்கள் அனுப்பப் பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.’
தேவனுடைய பிள்ளையான உங்களுக்கும் அவ்விதமான உதவி உண்டு; பரிசுத்த ஆவியானவரை உங்களுக்கு உதவி செய்யும்படியாக அனுமதியுங்கள். மற்ற எவரையும் விட உங்கள் சோதனையையும் அதனோடு உங்களுக்கு உண்டாகும் வலிகளையும் அவரால் நன்கு புரிந்துகொள்ள முடியும். சோதிக்கப்பட்ட பின்புதான் இயேசு தன் ஊழியங்களை ஆரம்பித்தார். அதனால் ஒவ்வொரு முறை நீங்கள் சோதிக்கப் படும்போதும் அதற்குப் பிறகு தேவனுக்கு மகிமையை கொண்டுவரும்படியான ஒரு ஊழியம் உங்களுக்கு காத்திருக்கிறது என்பது அடையாளமாயிருக்கிறது!
மறுபடியும் நம் கவனம் செலுத்துவோமா?
எதிரியின் சிறிய தூண்டில்களால் கவனம் திசை திருப்பப் பட்ட எல்லோருக்காகவும் என் ஜெபங்கள்.
அன்பு,
ஷைஜு