நீங்கள் புரிந்துகொள்ளாதபோது, தவறான தீர்ப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக, நீங்கள் உங்கள் அமைதியை இழக்கிறீர்கள்; உங்கள் விமர்சனம் எதிரிக்கு ஒரு கதவை திறந்துவிடுகிறது.
பிசாசுக்கு சொந்தமான ஆயுதம் இல்லை. இயேசு அவனுடைய ஒவ்வொரு ஆயுதத்தையும் சிலுவையில் சுமந்தார். பிசாசுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் நீங்கள் கொடுப்பதுதான்.
நீங்கள் பின்வாங்கும் போது உங்கள் வீட்டிற்குள் எதிரி நுழைய முடியும். நீங்கள் இடம் கொடுக்கும் போது பயம் வருகிறது. பதட்டத்திர்க்கு இடம் கொடுக்கும் போதும் அதே ஏற்படுகிறது.
நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியை எவ்வாறு எதிர்நோக்குவதற்கு கிறிஸ்து விரும்புகிறார்? நமக்கு கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சமாதானத்தையும் ஓய்வையும் அடைவதற்கு முக்கிய திறவுகோல் என்ன?
திறவுகோல் # 1. சமாதானம் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது.
“அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்தஅமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப்பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்றுஎன்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும்இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர்சொல்லிக்கொண்டார்கள்.” (மாற்கு 4:39-41)
யோனா, இயேசுவின் முன்நிழலாக இருந்தான். இருவருக்கும் உள்ள வேறுபாடுகள்: யோனாவின் மீனின் வயிற்றில் இருந்தான், இயேசு நரகத்தின் வயிற்றில் இருந்தார். யோனா கடலில் தள்ளப்பட வேண்டும் என்று கெஞ்சினார். இயேசு, அதே சூழ்நிலையில், அமைதலாயிருஎன்றார். இயேசு தன் அடையாளத்தில் பதிலளித்தார், “மனிதன்தான் நான், ஆனால் ராஜா.”
நம்முடைய சூழ்நிலையை பொருட்படுத்தாமல் அவருடைய சமாதானத்தை தேடவேண்டும் என்று ஆண்டவர் ஆசைபடுகிறார்.
திறவுகோல் # 2. சமாதானம் நம்முடையது.
ஆண்டரின் பிள்ளைகள் என்ற முறையில், நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் சமாதானம் முன்னெடுக்க வேண்டும். கிறிஸ்துவில் நாம் சமாதானத்தை நாடுகிறோம்.
லூக்கா 10:5-6 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச்சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம்அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத்திரும்பிவரும்.”
நாம் எங்கு சென்றாலும் சமாதானத்தை விடுவிக்க இயேசு நமக்குக்கட்டளையிட்டார்.
நாம் யார் என்று நமக்கு தெரியவில்லை என்றால், எதிரிகளை நம்களத்திற்கு கொண்டு வருகிறோம். நாம் கிறிஸ்துவில்தங்கியுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். ராஜ்யத்தின்சூழலை திறக்க சமாதானம் முக்கியம்.
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடையசமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம்கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக”. (யோவான் 14:27)
பேதுரு தனது திட்டமிட்ட மரணதண்டனைக்கு முன் இரவை எப்படி தூங்கச் சென்றார் என்பதைக் கவனியுங்கள், ஆண்டவரின் அன்பில் உறுதியடைந்து.
நமக்கு இயேசு இருந்தால், நமக்கு சமாதானம் இருக்கிறது. இயேசு சமாதானம். நாமக்கு அவர் இருக்கிறாற்.
கிறிஸ்துவில், நாம் எந்த சூழ்நிலையையும் மாற்ற, சமாதானத்தை கட்டளையிட நாம் அபிஷேகம் பன்னப்பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமாதானம் ஆட்சி செய்ய வேண்டும். ஆகையால், நின்று, கட்டளையிடு; “அமைதலாயிரு”
திறவுகோல் # 3. அன்பு + விசுவாசம் = சமாதானம்
இயேசு இல்லாமல், நீங்கள் எதை நேசிக்க வேண்டும் எம்று கற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துவில் நாம் நேசிக்க கற்றுக்கொள்கிறோம். இது வாழ்க்கை மாறும் சமாதானத்தை தருகிறது.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகியதேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலேஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மைஆசீர்வதித்திருக்கிறார். தமக்குமுன்பாக நாம் அன்பில்பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர்உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத்தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத்தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மைஇயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்”. (எபேசியர் 1:3-6)
விசுவாசம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணமாக சமாதானம் வருகிறது.
நாம் கிறிஸ்துவின் விசுவாசத்திலும் அன்பினாலும் நடப்பதால், புதிய அனுபவத்திற்க்குள் நடக்கலாம். நாம் ராஜாவின் மேல் விசுவாசம் வைத்து சமாதானம் உள்ளவர்களாக அரியபடுவோம்.
உங்கள் வாழ்வில் இதை அறிக்கையிடுங்கள்: உன்னதங்களிலேஆவிக்குரிய சகல ஆசீர்வாதமும் இயேசுவின் நாமத்தில் என்னுடையது!