உபவாசிக்க ஏழு சிறந்த காரணங்கள்

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

July 7, 2018

ஏன் உபவாசம்?

 சமீபத்தில் அமெரிக்காவில் உபவாசம் என்று செய்திகளில் வந்து கொண்டு இருக்கிறது. உபவாசம் ஒரு திட்டமாக அவர்களது படைப்பிரிவில் உள்ளடங்கி உள்ளது. சில நாட்கள் சாப்பிட்டு, பின்னர் ஒரு சில நாட்கள் உபவாசம் இருப்பதுதான் இதனுடைய நோக்கம். மீண்டும் செய்யவும். பின்னர், நீங்கள் வுடனே மெல்லிய இடை கொண்டவற்களாக மாறிவிடுவீற்கள். (நீங்கள் படிக்கிற எல்லாவற்றையும் நம்பாதேயுங்கள்!) 

சபையில் சிலர் கண்டிப்பாகவும், சிலர் மனமின்றியும் உபவாசம் செய்கிறார்கள். உபவாசம் பொதுவாக, சிறப்பு நாட்களில், உயிர்த்தெழுதல் நாளில், வருடத்தின் முதல் மாதத்தில் அல்லது சபை தலைவர்கள்  வேண்டுகோள் விடும்போது நடைபெருகிரது

உண்மை என்னவென்றால்உபவாசித்தால் உங்கள் சரிரம் பெருக அதிக உத்திரவாதம் உண்டு. உபவாசத்தின் மூலம் உங்கள் ஆவி பெருகி மாம்சம் சிறுகும். உடல் எடையை இழந்தாலும், ஆண்டவரோடு ஒரு நெருங்கிய உறவை உருவாக்கும்

இயேசு பூமியில் இருந்தபோது, உபவாசம் ஒரு கட்டயமான அடையாளமாக இருந்தது; தெரிந்து கொள்ள்பட்டவர்கழுக்காக உபவாசம் வடிவமைக்கப்பட்டுள்ளதுபரிசேயரும் அதைப் பொதுமக்களுக்கு உபதேசித்தனர், குறிப்பாக மற்றவர்கள் பார்க்கும்படி அவர்கள் உபவாசித்தார்கள்

இயேசுவின் சீடர்கள், அப்படியல்ல. உண்மையில், மாறாக மிகவும் வித்தியாசமாகவும் வெளிப்படையாகவும் இருந்ததார்கள். உபவாசம் என்பது கட்டாய தேவையாக இருப்பினும், இயேசவை பின்பற்றுபவர்கள் உபவாசிக்காமல் இருப்பதை பார்த்து, யோவானின் சீடர்கள் சிந்தித்து கொண்டு இருந்தார்கள்

மாற்கு 2:19-20 “யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்”.

கேட்டபோது, இயேசு இவ்வாறு விளக்கினார்: நான் இங்கே இருக்கிறேன், அதனால் உபவாசிக்க வேண்டாம். மேலும் அவர் விவரித்தார், “நான் போன பிறகு என் சீஷர்கள் உபவாசிப்பார்கள்

இரண்டு ஆயிரம் வருடம் கழித்து, மணவாட்டியாகிய சபை, மணவாளன் வரும் வரை உபவாசிக்க வேண்டும்

நாம் ஏன் உபவாசிக்க வேண்டும்

இங்கு  உபவாசிக்க 7 காரணங்கள் உள்ளன

1.உபவாசம் திசையையும் தெளிவையும் தருகிறது எலியா திசையை இழந்து மறிக்க வேண்டும் என்று நினைத்த போதுதேவனுடைய தூதனானவர் அவருக்கு ஊழியஞ்செய்து, மலைக்கு போ, தேவன் உன்னைச் சந்திப்பார் என்று கட்டளையிட்டார்”. (1 இராஜக்கள் 19:4-8) 

நாற்பது நாட்கள் இரவும் பகலும் எலியா உபவாசித்த போது ஆண்டவர் அவனுக்கு தரிசனம்மானார்.   நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதற்கு தெளிவான வழிநடத்துதலைப் பெறுவதற்கு உபவாசம் நம்மை தயார்படுத்துகிறது

2.உபவாசம் சர்வவல்லமையுள்ள ஆண்டவரிடம் இன்னும் அதிக கவனம் செலுத்த வுதவுகிரது. நாம் உணவை விட்டு விலகும்போது, நம் ஆவி இன்னும் சுறுசுறுப்பாக, புத்திசாலியாக, அறிவார்ந்தாக மற்றும் ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக மாறுகிறோம்.. உங்கள் மாம்சத்துக்கு உணவளிக்கையில்ஆவி பலவீனமாயிருக்கிறது. நம்முடைய ஆவிக்கு உணவளிக்கையில், நம் மாம்சம் பலவீனமாகிறது. இன்னும் நாம் ஆண்டவரோடு நடக்கும் போது, ஆண்டவர் என்ன சொல்கிறார் என்பதைப் நம் ஆவி புரிந்துகொள்ள தொடங்கும்ஆண்டவர் நம்மை வழிநடத்துவார்நாம் உணவை விட்டுவிட்டு, அவருடைய சத்தத்தை தேர்ந்தெடுக்கும்போது நம் ஆவி ஆண்டவரோடு இனைந்து இருக்கிறது

3.உபவாசம் ஆண்டவரின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.   உபவாசம் என்பது ஒரு உடன்படிக்கை, உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு  வுண்டாகும் உறுதியான  வாக்குறுதி, தேவனுடைய குமாரனாகிய இயேசு நாற்பதுநாள் உபவாசித்தார். மனிதர்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்தார்:

லூக்கா 4:1-2, இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று

நாற்பது நாட்களின் முடிவில், தேவதூதர்கள் அவருக்கு ஊழியம் செய்ய வந்தார்கள், இயேசு வல்லமையோடு வெளியே வந்தார். உபவாசத்திற்குப் பிறகு ஆண்டவர் வல்லமை பெற்றிருந்தால், நாம் உபவாசிக்கும் போது அதே எதிர்பார்ப்புடன் இருந்தால், ஆண்டவருடைய வல்லமை நம் வாழ்வில் விடுவிக்கப்படும்

4.உபவாசம் தெய்வீக சந்திப்பைக் கொண்டுவருகிறது. நாம் .உபவாசிக்கும் போது  விடாமுயற்சியுடனும் கர்த்தரைத் தேடும் போது அவரே நமக்கு வெளிப்படுத்துகிறார். இது மலையின் மேல்  பெரும்பாலும் நடக்கிறது. நாம் மேலே செல்ல வேண்டும், அவரைப் பற்றிக்கொள்ள சர்வ வல்லமையுள்ள ஆண்டவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். நாம் நேரத்தை ஒதுக்க தீர்மானித்து, கர்த்தருடைய பிரசன்னத்தை அணுகும்போது, நாம் உபவாசம் செய்து ஆண்டவரின் முகத்தை நாடும் போது ஒரு காரியம் நடக்கிறது

பழைய ஏற்பாட்டின் தானியேல் மற்றும் புதிய ஏற்பாட்டின் பேதுருவும், உபவாசித்து, ஜெபித்து தனிமையில் இருக்கும் போது, தரிசன்ங்களும், தேவ துதர்கள சந்திப்பும் இருந்தது

நீங்கள்  உபவாசிக்க நேரத்தை ஒதுக்கி வைத்தால், ஆண்டவர் உங்களுக்கு என்ன காண்பிப்பார்

5.உபவாசம் எதிரியின் மேல் வெற்றியை தறுகிரதுஎதிரிகள் நமக்கு விரோதமாக பயன் படுத்தும் ஆயுதங்கள், நாம் உபவாசித்து ஜெபிக்கும் போது வல்லமையை இழந்துவிடும். நாம் உபவாசம் இருப்பதால், சாத்தானைத் துன்புறுத்துவோம்சுதந்தரத்தை எதிர்த்து நிற்கிறவரிகளுக்கு, நாம் உபவாசிக்கும் போது ஆண்டவரின் அக்கினியை விடுவிக்கிறது. நாம் நெருப்பாய் இருக்கையில், நம் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறோம்

6.உபவாசம் தெய்வீக மன்னிப்பை தருகிறது. வேதம் முழுவதும், இஸ்ரவேலின் சரித்திரத்தில் ஆண்டவர் ஒரு தலைமுறையினருடன் கோபமடைந்ததை நாம் காண்கிறோம். மீண்டும் ஒரு முறை, இஸ்ரவேல் முழங்கால்களில் சென்றது, கர்த்தர் தேசத்தை மன்னித்தார். ஒரு நாட்டின் தீர்ப்பும், வீட்டின் தீர்ப்பும், உபவாசத்தால் மாற்றபடலாம். தலைமுறை சாபங்கள், நீண்ட உபதிரவங்கள், .உபவாசத்தாலும் ஜெபத்தாலும் மாற்றபடலாம்அவருடைய சீடர்களுக்கு, உபவாசம் ஆண்டவரின் திட்டத்தின் பாகமாக இருக்கிறது

7.உபவாசம் என்பது அவருடைய சீடர்கள்ளாகிய நமக்கு ஆண்டவரின் திட்டத்தின் பாகமாக இருக்கிறது. இயேசு, யோவானின் துருப்புகளுக்குச் சொன்னார், அவர் போன பிறகு, உபவாசம் அவசியம். நம் ஆண்டவர் உபவாசித்ததால் நாம் உபவாசிக்கிறோம். நாம் ஆண்டவரோடு நெருங்கி வர உபவாசிக்கிறோம், உணவை தவிர்த்து இராஜாவினிடத்தில் வர நம்மை  உந்துகிறது. நாம் கறை திறை அற்ற மனவாட்டியாக இருக்க உபவாசிக்க வேண்டும்நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கடுமையான சரிசெய்தல் தேவைப்படுகிறது

உங்களுடைய வீட்டிலுள்ள எதிரிகளின் வேலையை அழிக்க ஆவிக்குரிய அதிகாரம் உங்களுக்கு வேண்டுமா

இயேசுவின் வலிமை வாய்ந்த பெயரால், உங்கள் வீட்டிற்கு எந்த பலவீனமும் இல்லை, எந்தவிதமான எதிர்ப்புக்கும், ஆவிக்குரிய மனப்பான்மையும் இல்லை என்று அறிக்கை இடுங்கள்.  

ஆண்டவரகிய இயேசு கிறிஸ்துவில்  வெற்றி உங்களுடையதாக உபவாசியுங்கள்!