உயர்ந்த கனம் பெறுதல் (பகுதி – 3) – தனியேலின் சந்ததியாருக்குரிய தங்க திறவுகோல்

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

December 21, 2018

இது கனம் பெறுதல் என்ற தலைப்பிற்குரிய 4வது தொகுப்பில் மூன்றாவது பாகமாகும். நீங்கள் முதல் இரண்டு பகுதிகளை வாசிக்க விரும்பினால் தொடர் இணைப்புகளை இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளவும். முதல் பாகம்: உன் ஆசிர்வாதத்தை வாசலை திறக்க பரிமாற்றம். இரண்டாம் பாகம்: உன் ராஜாவின் இருதயத்தை திறக்ககூடிய திறவுகோல். தயவுசெய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்துகொள்ளவும்.

நீங்கள் எப்பொழுதாவது தோல்வியை எதிர்பார்த்து ஒரு பரிட்சையில் ஜெயம் அல்லது வெற்றியை எடுத்து உண்டா?

ஒரு சமயம் நான் எனது போதகர் நண்பருடன் சிங்கப்பூரில் ஒரு அழகுசாதன பரிசோதனை நிலயத்திற்கு சரும பரிசோதனைக்காக சென்றிருந்தேன். அந்த பரிசோதனை நிலயத்திலுள்ள சரும நிபுணர் என்ன நண்பனை சோதித்து பார்த்துவிட்டு உங்கள் சருமம் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். இந்த போதகர் தான் சருமத்தை மிக கவனத்தோடு பராமரிக்க கூடியவர். நான் என்ன நண்பனை போலவே என்ன சருமத்தை பராமரிக்கவேண்டும் அன்று நினைப்பது உண்டு. ஆனால் என்ன நண்பனுடைய சருமத்தை பரிசோதித்த நிபுணர் இப்பொழுது அவர் சருமம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

அதன் பிந்து என்னுடைய முறை வந்த போது சிறிய கலக்கத்தோடு இருந்தேன்.ஆனால் ஆச்சரியவிதமாக என்னை பரிசோதனை செய்த நபர் என்ன சருமம் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக உள்ளது என்று சொன்னார். இந்த நல்ல செய்திக்கு யார் காரணம். யார் பின்னணியில் இருந்தது என்று எனக்கு தெரியும்.

என்னுடைய அழகான மனைவி போதகர்  Tiny  பல அழகு சாதன பொருட்கள் சேகரிப்பதிலும் பயன்படுத்ததிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். நான் அவர்களுக்கு தெரியாமல் முகம் கழுவப்போகும்போதெல்லாம் என்ன மனைவி வைத்திருந்த அழகு சாதன பொருட்களை எது பயன்படுத்துக்கொள்வேன். நான் என்னோடு வாழ்ந்த ஒரு நபரின் கிருபைகளை அனுபவித்து வந்தேன். அதன் விளைவாக என்ன சருமம் அதை நிரூபித்து விட்டது.

தனியேலின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள். தானியேல் 1:17-21 இதில் கூறப்பட்டுள்ள நன்கு வால்பார்களுக்கும் தேவன்  சகல எழுத்திலும், ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியதையும் கொடுத்தார். தனியேலை சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்கள் ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதிற்கு குறித்த நாட்கள் நிறைவேறினபோது பிரதானிகளின் தலைவன் அவர்களை ராஜாவினிடத்துக்கு கொண்டு வந்து விட்டான். ராஜ் அவர்களோடு பேசினான். தானியேல், அனானிய, மிஷாவேல்,  அசரியா என்பவர்களை போல வேறெங்கும் காணப்படவில்லை. ஆகையால் இவர்கள் ராஜா சமூகத்தில் நின்றார்கள்.

ஞானத்துக்கும்,புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்திலும் ராஜா அவர்களை கேட்டு விசாரித்தனோ அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவைகளை பத்து மடங்கு சமஸ்தானாக கண்டார். கோரேஸ் ராஜ்யபாரம் பண்ணும் முதல் வருஷம் மட்டும் தானியேல் அங்கே இருந்தான்.

நேபுகாத்நேச்சராகிய பாபிலோனின் ராஜா எருசலேமின் மேல் படையெடுத்து யுத்தம் செய்து தானியேல் என்ற ஒரு உயர் பிரபு குல வாலிபனாகிய தனியேலை சிறைபிடித்து கப்பல் மூலமாக இன்னும் பல இஸ்ரவேல் தேசத்து வாலிபர்களோடு பாபிலோனுக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். இந்த வாலிபர்கள் அவர்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை வணகுகிறவர்களாக, ஆராதிக்கிறவர்களாக இருந்தார்கள். ஆனால் அரண்மனைக்குள் பிரவேசிப்பதற்காக வைக்கப்பட்ட பரிட்சையில் தனியேலும் அவனுடைய மூன்று நண்பர்கள் மாத்திரமே வெற்றி பெற்று உயர்த்தப்பட்டார்கள். அவனோடு வந்த மற்ற யூதர்கள் உபத்திரவப்பட்டார்கள். ஆனால் இந்த மூன்று உபத்திரவப்படவில்லை, உயர்த்தப்பட்டார்கள்.

ஏன்?

சில சமயங்களில் துன்பப்படுகிற உபத்திரவப்படுகிற மக்கள் மேல் பரிதாபப்படுவதோடு நின்றுவிடுகிறோம். நான் ஏன் துன்பப்படவேண்டும், பாடுபடவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளுவதில்லை.ஆகவே அப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்களை தவறான நண்பர்களை தெரிந்துகொள்கிறார்கள்.

நீங்கள் தானியேல் போன்ற மிகசிறந்த தேவா வைராக்கியமான, தைரியமான, மக்களால் சூழப்பட்டிருப்பீர்களானால் நீங்கள் வித்தியாசமாக இருப்பிர்கள், வித்தியாசமாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்கை வித்தியாசமாக இருக்கும்.

தானியேல் இந்த நாட்களில் இருத்திருப்பானால் ஜெபிக்கிறவனாகவே இருந்திருப்பான். நிகழ்நிலையில் நேரத்தை செலவிடுகிறவர்களாக பல விதமான இறைச்சி வகையான உணவுகளை நீங்கள் ஆர்டர் செய்யும்போது அவர் நல்ல ஆரோக்கியமான காய்கறி சால்ட் ஆர்டர் பண்ணி ஆரோக்கியமான உணவு முறையை காண்பித்திருப்பர். அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த மக்களிடம் கனிவோடு பேசியிருப்பார். அவருடைய மிகசிறந்த பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்திருக்கும். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையும்.

சில மனிதர்கள் சில கிருபைகளை வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. கிருபையை அனுபவிக்கிற மக்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு அர்பணிப்பின் பாதையில் மிகசிறந்த வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனோடு அவன் பாதத்தில் இருக்க பழகினவர்கள் தங்கள் வாழ்க்கையில் சோதனைகள் போராட்டங்கள் வரும்போது தன்னை சூழ இருக்கிறவர்கள் மத்தியில் ஜெயித்தவர்களாக பிரகாசிப்பார்கள். நமது ஆவிக்குரிய பலமாக கட்டப்படும். கிருபை என்ற அடைக்கலத்தில் வாழ்க்கையின் பரீட்சை நேரங்களில் கர்த்தர் தெரிந்துகொண்ட நல்ல ஐக்கியத்தில் இருந்தால் நாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவீர்கள்.

இந்த மிகசிறந்த இளம் தானியேல் ஒரு தேசத்தின் ராஜாவே தேவனை ஏற்படுத்துகிறார், நிலை நிறுத்துகிறார் என்று புரிந்துகொள்ளுகிறான். நேபுகாத்நேச்சார் ஒரு கொடூரமான புறஜாதியன் ராஜா. ஆனால் தேவேனே அவனை நிலைநிறுத்துகிறார். தானியேல் ராஜாவின் அதிகாரத்தை ராஜாவினால் ஏற்படுத்தப்பட்ட பிரதான காவலாளி இவர்களை, இவர்கள் அதிகாரத்தை அங்கீகரியாமல் இருந்திருந்தால் அழிந்து போயிருப்பான்.

உன் வாழ்க்கையில் உனக்கு மேல் ஏற்படுத்தப்பட்ட அதிகாரிகள் உண்டு.

நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அதிகாரிகள் விசுவாசிகளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தேவன் அவர்கள் ஏற்படுத்தினபடியால் எவர்களுக்கு கனத்தை கொடுக்கவேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது எல்லா மனிதனும் ஆளுகிற அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருக்கவேண்டும். தேவனாலேயன்றி ஒரு அதிகாரமும் இல்லை.

தானியேல் தன்னை ஆளுகிற அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறிந்திருந்தான். தானியேல் தனக்கு மேல் இருக்கிற அதிகாரம் உள்ளவர்களுக்கு அடங்கி இருப்பது மனிதனுக்கு அல்ல அது தேவனுக்கு அடங்கி இருப்பது என்று தானியேல் அறிந்திருந்தான். நீ அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய பழகும்போது கர்த்தர் உன்னை ஒரு அதிகாரியாக மாற்றுவார். நீ உனக்கு மேல் இருக்கும் அதிகாரத்தை கனம் பண்ணாவிட்டால் நீ விரும்பிய இடத்திற்கு நீ உயர்த்தப்படும்போது நீ அதை கனவீனப்படுத்துவாய். உன் உயர்வுக்கு உன்னை ஆயத்தப்படுத்தும் பரிட்சையாக அமையும்.

ரோமர் 13:1-4

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

அதிகாரத்தில் உள்ளவர்கள் நீதி நியாயம் உள்ளவர்களாய் இருந்தாலும், கரிசனை உள்ளவர்களாய் இருந்தாலும், கொடுமைக்காரர்களாய் இருந்தாலும், புத்திசாலிகளாய் இருந்தாலும் அவர்களை நாம் கணபடுத்தவேண்டும்.

பவுல் அப்போஸ்தலன் நம்மை ஆளுகை செயகிறவர்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்றும் விசுவாசிகளாகிய நாம் அவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் நாம் மற்றவர்களுக்கு எப்பொழுதும் நன்மை செய்யவேண்டும் அன்று புத்தி சொல்லுகிறான்.

நீங்கள் வேலை செய்கிற இடத்திலே உங்கள் மேல் அதிகாரி நீ நன்றாய் செயதால் உன்னை பாராட்டுவர். உங்கள் ஆசிரியர்கள் உங்கள் கடின உழைப்புக்கு உங்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கொடுத்து உங்களை கணபடுத்துவார்கள். அதுபோலவே நம் தேவனும் நம்மை உயர்த்துவதற்கு சில மனிதர்களை பயன்படுத்துவர். நாம் மிகசிறந்த மனிதர் அதிகாரங்களுக்கு அடங்கியிருப்போமாக.

நமது மிக பெரிய சிறந்த முன் உதாரணம் நம் கனத்திற்குரிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.  லூக்கா 2:52 சொல்லுகிறது “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்”.

நீங்கள் கனம் பெற்றவர்களாக இருக்கீறீர்களாக என்று சோதித்து பார்க்க சில கேள்விகள் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.

  1. நீ உனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் உன் குறையை சுட்டிகாண்பிக்கும்போது திருத்த முயலும்போது எதிர்த்து நிற்க்கிறீர்களா
  2. உன்னுடைய சிந்தனைகள் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த சகோதரர்கள் முன்பாக கனமுள்ளதாக இருக்கிறதா?
  3. உன் பெருமை, உயர்வு உன்னை கவர்த்திழுக்கின்றதா? (உன் சனிக்கிழமை இரவு நடவடிக்கை எப்படி இருக்கிறது)
  4. உனக்கு மேல் நியமிக்கப்பட்ட அதிகாரங்களை ஆசிர்வதிக்கிறீர்களா? உங்கள் மேல் அதிகாரி, பெற்றோர், ஆசிரியர்கள், உங்கள் மேய்ப்பர்கள்.
  5. உன் வாழ்க்கையில் உங்கள் வார்த்தை, சிந்தனை, செயல் யாவும் மற்றவர்களை கனம் பண்ணுகிறவிதமாக இருக்கிறதா?
  6. பரிசுத்த ஆவியானவரிடம் ஏன் வாழ்க்கையில் இந்த பகுதியில் நான் வளர்ந்துகொண்டே இருக்க உமது திட்டம் என்ன என்று கேட்கிறோமோ?

மிகவும் பிரியமானவர்களே உங்களோடு இந்த பயணத்தில் நடந்து செல்ல எனக்கு மிக மகிழ்ச்சி. அவரது நெருங்கிய நம்மை உயர்த்த சிந்தனை உள்ளவர்களாக மாற்றுவதாக. நம்முக்குமேல் ட்வைன் ஏற்படுத்திய அதிகாரங்களை கணபடுத்திவோமாக. நாம் ஒரு தனியேலின் சந்ததியாக தேவனுடைய நாமம் மகிமைக்காக தலைசிறந்த மகளாக கிருபைபெற்ற  மகளாக இருப்போமாக.