106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 7)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 3, 2019

நாள் 7: கர்த்தருக்கு விரோதமான எதிர்மறையான சிந்தனைகளை ஊக்குவியாதே

சங்கீதம் 106:24-25 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள். கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.

எபிரேயர்கள் கர்த்தர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தைக் குறித்து எதிர்மறையான காரியங்களை பேச ஆரம்பித்தார்கள் ஏனென்றால், தாங்கள் விரும்பின காரியங்கள் கிடைக்காதபடியினால் அப்படி செய்தார்காள். ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக போராடி அது அவனுக்கு மறுக்கப்பட்டால், உடனே அதைக்குறித்து குறைவாக, இழிவாக பேசுகிறான்.

உங்கள் விரோதி (சாத்தான்) உங்களுக்கு தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் உங்களை முறுமுறுக்க வைத்து ஆசீர்வதத்தை தாமதப்படுத்துவான். உங்கள் ஆசீர்வதத்திர்க்கு எதிர்மாறாக உங்கள் முறுமுறுப்பு பாவத்தைக் கொண்டு வருகிறது, முடிவிலே நியாயத்தீர்ப்புக்கு வழிவகுக்கிறது.

ஆவிக்குரிய முதிர்ச்சி நமக்குள் எப்பொழுது வருகிறது என்றால் நமக்கு விருப்பமான ஒன்று கிடைக்காமல் இருக்கும் போது, ஆர்பரியாமல் அமைதியைக் கடைப்பிடிக்கும் பொழுது, நினைவிலும் அமைதியைக் கடைப்பிடிக்கும் பொழுதுதான்.

ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது முழுமையானது. ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது நமக்கு ஒரு காரியத்தைப் பற்றி சிந்திக்க நாம் இடம் கொடுத்தாலும், அதை மற்றவர்களுக்கு பகிராமல் இருப்பதே. ஆவிகுரிய முதிர்ச்சி என்பது நமது நினைவுகளை நமக்குள் அடக்கிக் கொள்வதே. நாம் சேவிக்கும் தேவன் சிந்தனைகளையும் போதிதறிந்து பலன் கொடுக்கிறவராயிருக்கிறார்.

எண்ணாகமம் 11:1 பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.

நம் தேவன் அவருடைய ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்குள் நுழையாதபடி தடுத்த காரணம், அவர்கள் கூடாரங்களில் முறுமுறுக்கிறதைக் கேட்டதினால்தான்.

தேவனைப் பிரியப்படுத்துகிற வழி அவரை விசுவாசிப்பது தான். (எபிரேயர் 11:6). விசுவாசம் உங்களில் எழும்பும்பொழுது உங்கள் மனதை அலைபாய விடாதீர். சந்தேகம், முரட்டாட்டம் அல்லது உன் தலைமை ஸ்தாலத்தில் இருப்பவர்களை அவமதிப்பது போன்ற கிரியைகளை விட்டு விடுங்கள். ஏனென்றால், நாம் சேவிக்கும் தேவன் நம் தலையில் இருப்பதை (சிந்தனையில்) காண்கிறார். இப்படிப்பட்ட காரியங்களைத்தான் நீங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை உங்கள் கூடாரங்களில் செய்கிறீர்கள்; ஒருவரும் உங்களைக் காணாமல் இருக்கும் பொழுது. ஆனால், உங்களுக்குள் ஆவிக்குரிய பலன் இப்படிப்பட்ட தனிமைபாடு இருக்கிற நேரங்களில் நீங்கள் செயல்படுவதைக் குறித்தே உங்களுக்கு கிடைக்காது.

தேவன் ஆபிரகாமின் கூடாரத்தில் சற்றும் எதிர்பாரத நேரத்தில் வந்து சந்தித்தார். உங்கள் வீட்டில் எந்த சூழ்நிலை நிலவுகிறது? உங்கள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றாலும் நீங்கள் உங்கள் எண்ணங்கள் நம்புவதை சிந்தித்து கொண்டிருக்கிறீர்களா?

ஜெபம்: அப்பா, என் மேல் இரக்கமும் என்னுடைய பாவ சிந்தனைகளையும் மன்னிக்க வேண்டுகிறேன். ஆவியானவரே, என் எல்லா சிந்தனைகளையும் ஆட்கொண்டு என்னை போதிக்கிற தேவனிடத்தில் முழு இருதயத்தோடு விசுவாசிக்க உதவி செய்யும்.

நாளை தேவன்மேல் நாம் வைக்கவேண்டிய வைரக்கியத்தை குறித்து தியானிப்போம். ஆசீர்வாதமாயிருங்கள்.