நிற்கும் மனிதனைக் குறித்த ரகசியம்

SM Admin

"Experience the Word of God, in the power of the Spirit."

June 29, 2013

[English Translation] நான் என்னுடைய பால்ய பருவத்தில் மிதிவண்டி ஓட்டுவதில் அதிக ஆர்வமாக இருந்தேன். ஒரு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மிதிவண்டியில் தான் நான் முதலில் ஓட்டிப் பழகினேன். ஆனால் என் தகப்பனார் என்னுடையதை விட பெரிய மிதிவண்டி வைத்திருந்தார். நாங்கள் எங்கு செல்வதானாலும் அதில் தான் செல்வோம். அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் ஆடம்பர பொருள்களாகவே இருந்தன.

எல்லா சபை கூட்டங்களுக்கும் நாங்கள் குடும்பமாக அந்த மிதிவண்டியில் தான் செல்வோம். நான் சிறுவனாக இருந்ததால் நான் முன்புறத்தில் உள்ள ட்யூபில் அமர்ந்து ஹேண்டில் பாரை பிடித்துக்கொள்வேன், என் தாயார் பின்புறமுள்ள கேரியரில் அமர்ந்து கொள்வார். நாங்கள் செல்லும் வழியில் குழிகள் வரும்போதெல்லாம், அவை எங்களை அதிகமாக பாதிக்காதபடி என் தந்தை மிகவும் கவனமாக மிதிவண்டியை ஒட்டிசெல்வார். (நல்ல தார் சாலைகள் இல்லாத காரணத்தினால் அது பல சமயங்களில் மிக சிரமமான காரியமாக இருக்கும்) ஆனால் தேவனுக்கு ஊழியம் செய்வதில் உள்ள மகிழ்ச்சி எங்களை ஊக்கப்படுத்தினது.

ஒரு நாள், பெரிய சக்கரங்களையுடைய என் தந்தையின் மிதிவண்டியை ஓட்டி பார்க்க வேண்டும் என்று ஆர்வ மேலீட்டால் முயற்சி செய்தேன். (அது இங்கே படத்தில் கொடுக்கப்பட்டது போல் இருக்கும், அது ஒரு ஹீரோ பிராண்ட் வண்டி – உங்களுக்கு நினைவிருக்கலாம்.)

Shyjus-dad-cycle-typeஅதில் அமர்ந்து கால்களை தரையிலே வைப்பதே மிகவும் சிரமமாக இருந்தாலும், அதின் மேல் அமர்ந்து ஓட்ட ஆரம்பித்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு நான் அதை நிறுத்த நினைத்தாலும், கால்களை தரையில் ஊன்ற முடியாததால் என்னால் அதை நிறுத்த முடியாது என்று உணர்ந்தேன். ஆனால் அந்த மிதிவண்டி சற்று வேகமாக ஓட துவங்கியிருந்தது. மிதிவண்டியை ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு கம்பத்தில் இடித்து நிறுத்தி, சற்று நேரம் அதன் மேல் அமர்ந்தவாறே அதை பிடித்து கொண்டிருந்தேன்.

நீங்கள் நீரில் விழுவதால் மூழ்கி போவதில்லை. விழுந்தவுடன் அங்கேயே இருந்தால் தான் மூழ்கி விடுவீர்கள்.

அங்கு கடந்து சென்றவர்கள் எனக்கு உதவ முன்வந்தாலும், மதிய உணவுக்குப் பின் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த என் தந்தை வரும் வரை நான் மிதிவண்டியில் இருந்து கீழே இறங்க மறுத்தேன். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியதால் நான் அழ ஆரம்பித்தேன். என் தந்தை அங்கு சீக்கிரமாக வந்து நான் கீழே இறங்க உதவி செய்தார். இது நடந்து பல நாட்களுக்கு மிதிவண்டி ஓட்டுவதற்கு பயந்தேன். என் தந்தை என்னை ஒரு நாள் அழைத்து, “மகனே, வாழ்க்கையில் பல பயமுறுத்தும் சம்பவங்கள் வரலாம், ஆனால் நீ தைரியத்தை இழக்கக்கூடாது” என்று சொன்னார்.

அன்று அவர் கூறியது இன்று வரை உண்மையாக உள்ளது. பல அச்சுறுத்தும் மற்றும் காயப்படுத்தும் சம்பவங்கள் நம் வாழ்வின் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நாம் அவைகளினால் நம் நம்பிக்கையை கைவிட வேண்டியதில்லை. நாம் அவைகளை வென்று தொடர்ந்து முன்னேற வேண்டும்.

நடை பயிலும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் தடுக்கி விழுவதை நாம் பார்த்ததில்லையா? அவர்கள் பல முறை விழுந்தாலும் தொடர்ந்து வெற்றியோடு முன்னேறி செல்வதின் ரகசியம் மிகவும் சாதாரணமானது. அவர்கள் எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து கொண்டே இருப்பதே அதன் ரகசியம்.

baby-standing

படைப்பு: ஆஸ்கர் ராமோஸ் ஆரஸ்கோ

தேவனோடு நடக்கும் நடையில் எப்படி எழாமல் இருக்க முடியும்?

“நிற்கும் மனிதனைக் குறித்த ரகசியம், அவன் தான் விழுந்த இடத்தில இருந்து தொடர்ந்து எழுந்து கொண்டிருப்பதே.”

அன்புக்குரிய நண்பர்களே, வெற்றி பெறுவதற்கு இது ஒரு சாதாரணமான ரகசியமாகும்.. தொடர்ந்து எழுந்து நிற்பதே அந்த ரகசியம்.

நீங்கள் நன்றாக நிற்க முடியும் வரை எழுந்து நிற்க முயற்சியுங்கள்.

நன்றாக நடக்க முடியும் வரை எழுந்து நில்லுங்கள்.

பயமில்லாமல் இருக்க முடிகிற வரை எழுந்து கொள்ள முயற்சியுங்கள்.

பயமில்லாமல் ஓட முடிகிற வரை எழுந்து நிற்க முயற்சியுங்கள்.

இயேசுவை முக முகமாக காண முடிகிற வரை எழுந்து நிற்க முயற்சியுங்கள்.

தன்னை சளைக்காமல் தேடும் சந்ததியை ஒருபோதும் கைவிடாத தேவன் தேடிக்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து எழுந்து நில்லுங்கள்.

நீங்கள் எழுவதற்கு பயப்பட்ட தருணங்களை கடந்து வந்திருக்கிறீர்களா? உங்கள் பயங்களை எப்படி வென்றீர்கள்?