பிசாசு அதிகமாகத் தாக்கும் நான்கு முக்கியமான பகுதிகளை வெல்லுங்கள்!

SM Admin

"Experience the Word of God, in the power of the Spirit."

August 31, 2013

[English Translation] இயேசுவை நேசிக்கிறவர்களுக்கு எதிராக பிசாசு பல ஆயுதங்களை உபயோகிக்கிறான். இயேசுவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அவரை நேசிப்பதே அவனை உங்கள்மேல் கோபம் கொள்ளச் செய்கிறது.

devils-attack

நம்மைச் சுற்றிலும் உள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரிடத்திலும் அவன் இந்த ஆயுதத்தை உபயோகிக்கிறான். வழி விலகச் செய்யும் இந்த ஆயுதத்தால் பலர் தோற்று போயிருந்தாலும், இந்த ஆயுதத்தை மேற்கொண்டவர்கள் வெற்றியாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

சோர்வு என்பதே அந்த ஆயுதம்!

பாவம், ஆதாமையும் ஏவாளையும் தேவனுக்கு முன்பாக செல்வதற்கு நம்பிக்கை அற்றவர்களாக மாற்றியது. சோர்வும், பயமும் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியதால் அவர்கள் தேவனை விட்டு ஓட முற்ப்பட்டார்கள். பின்னர், தேவன் பலியை ஏற்றுக்கொள்ளாததால், காயீனுக்குள்ளும் இந்தச் சோர்வு இருந்ததை நாம் காணலாம்.

பழைய ஏற்பாடு முழுவதும், ஏன் புதிய ஏற்பாட்டிலும் பல தேவனுடைய ஜனங்களை சோர்வில் ஆழ்த்துவதின் மூலம் தேவன் தங்களுக்கு வைத்திருக்கும் மேலான வாழ்கையில் இருந்து வழிதவறிச் செல்ல சாத்தான் முயல்வதைக் காணலாம்.

எலியா தீர்க்கதரிசி இதற்க்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவர் சோர்வை தன் இருதயத்தில் அனுமதித்ததினால் போராடுவதற்கான பெலனை இழந்து போனார்.

பிசாசுக்கு ஒரே நோக்கம் தான் உண்டு – தேவனோடு நடக்கும் நடையில் இருந்து உங்களை வழி மாறச் செய்யவே அவன் போராடுகிறான்.

1.       ஆசீர்வாதமின்மையினால் வரும் சோர்வு

தேவனோடு நடக்கும் நடையில் இருந்து உங்களை சோர்வடையச் செய்யவே, பிசாசு உங்கள் ஆசிர்வாதங்களை திருடவும், கொல்லவும், அழிக்கவும் முயல்கிறான். தேவனுடைய நற்குணத்தை குறித்து உங்கள் மனதில் சந்தேகம் எழச்செய்கிறான். நீங்கள் தேவனை மறுதலிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் வேலையில் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம், உங்கள் மகிழ்ச்சியை குலைத்துப் போடலாம், உங்களை வெட்கத்துக்குள்ளாக்கலாம். பிசாசு, உங்கள் இருதயத்தை சோர்வடையச் செய்ய எதை செய்வதற்கும் தயங்க மாட்டான்.

2.       மனிதர்களால் வரும் சோர்வு

நீங்கள் யாரை அதிகமாக நேசிக்கிறீர்களோ அவர்கள் மூலமாகவே பிசாசு உங்கள் இருதயத்தை சோர்ந்து போகச் செய்வான். நீங்கள் யார் மீது அதிகமான அன்பையும் மதிப்பையும் வைத்திருக்கிறீர்களோ அவர்கள் உங்களை கடுமையான சொற்களால் காயப் படுத்தும் போது உங்களை சோர்வடையும்படி செய்வான். நீங்கள் எதில் அதிகமாக அக்கறை செலுத்துகிறீர்களோ அதை வைத்தே உங்களை உடைந்து போக செய்ய முயற்சிப்பான். உங்களை நடத்துபவர்கள், உங்கள் குடும்பத்தினர் அல்லது உங்களுடைய மிக நெருங்கிய நண்பரை வைத்தே இவ்வாறு செய்ய முயற்சிப்பான். தேவன் மீது உங்கள் இருதயதில் உள்ள நம்பிக்கையை நொறுக்குவதே அவன் நோக்கமாக இருக்கிறது.

  • மனிதர்களின் வார்த்தைகளால் உண்டாகும் சோர்வு

சிலர் மற்றவர்களை எப்பொழுதும் காயப் படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவது உங்களை காயப்படுத்துவதற்காக அல்லாமல் வேறு நோக்கத்திற்காக கூட இருக்கலாம். பெரும்பாலும் உங்களுக்கு மறைமுகமாக எதையாவது புரிய வைப்பதற்காக அல்லது சொல்வதற்காகக் கூட இப்படி நடந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது எதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நிதானிக்க வேண்டும். அவர்களில் உள்ள நல்ல காரியங்களை ஏற்றுக்கொண்டு உங்களை காயப்படுத்தும் காரியங்களில் பாராமுகமாக இருந்துவிடுங்கள்.

  • மனிதர்களின் செயல்களால் ஏற்படும் சோர்வு

நீங்கள் அவர்களோடு நன்றாகப் பழகியும் அவர்கள் உங்களை சட்டை செய்யாமல் போகலாம். அல்லது, சில சமயங்களில் நீங்கள் முன்னரே அறிமுகமாகி இராவிட்டாலும் உங்களோடு சண்டையிட விரும்புபவராக அவர்கள் இருக்கலாம். மற்றவர்கள் உங்களோடு போராடும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று என் மனைவி டினி ஒரு வலைப்பதிவை எழுதியிருக்கிறார். சில நேரங்களில் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையை குலைப்பதற்காக மற்றவர்களை உங்களுக்கு துரோகம் செய்யவும், காயப்படுத்தவும் தூண்டுவான்.

உங்களை காயப்படுத்தும் ஒரு முள்ளின் நிமித்தமாக ரோஜாவோடு உள்ள உறவை துண்டித்து விடாதீர்கள். ஒரு மனிதர் உங்களை உதாசீனப் படுத்திய நியாபகங்களோடேயே உங்கள் வாழ்க்கையை வாழாதீர்கள். இதில் இருந்து கற்றுக்கொண்டு மேற்கொண்டு முன்னேறுங்கள்.

3.       தேவன் மீது ஏற்படும் சோர்வு

உங்கள் எதிரியான சாத்தான் தேவனுடைய அமைதியையே உங்களுக்கு எதிராக உபயோகிக்க முயற்சிக்கலாம். தேவன் உங்களுக்கு மறுக்கும் காரியங்களை உபயோகித்து உங்களை சோர்வுக்குள்ளாக்க முயற்சிப்பான். மேலும் உங்களை சோர்வுக்குள்ளாக்கி, தேவன் உங்களை நேசிக்காததினால் தான் நீங்கள் எதிர்பார்த்த காரியங்களை உங்களுக்கு மறுக்கிறார் என்று உங்களுக்கு பொய்யான போதனை செய்வான். அவனுக்கு வேண்டியதெல்லாம், உங்களை சோர்வுக்குள்ளாக்கி தேவனுடைய அன்பின் மேல் உங்களை சந்தேகப்பட வைப்பதே ஆகும்.

4.       உங்கள் மீது வரும் சோர்வு

நீங்கள் எதற்கும் தகுதியானவர் அல்ல என்று உங்களோடு மெல்லிய குரலில் சொல்வது எதிரிக்கு மிகவும் பிரியமான காரியம். தேவன் உங்களை ஆசிர்வதிக்காததற்க்குக் காரணம் அவர் உங்கள் மேல் அதிகமாக அன்பு செலுத்தாததினால்தான் என்று என்று உங்களை நம்ப வைப்பது, உங்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு தகுதி இல்லை என்று சிந்திக்க வைப்பதற்குத் தான். பல விசுவாசிகள் எதிரியினுடைய இந்த சூழ்ச்சியை நம்பி விடுகிறார்கள்!

பின்னர், உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் நீங்களே காரணம் என்று நம்ப வைத்து விடுவான். “நான் நன்றாக முயற்சி செய்யாததினால் தான் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை”, “நான் அழகாக இல்லாததினால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை”, “நான் ஒரு பாவியாக இருப்பதினால் தேவன் என்னை நேசிக்கவில்லை” என்று பலவாறு உங்களை நம்ப வைக்க முயற்சிப்பான்.

இவ்விதமாக பல பொய்களைக் கூறி, வாழ்கையே வெறுக்கும் அளவுக்கு செய்துவிடுவான்.

சோர்ந்து போன போர் வீரன் இறந்து போன போர் வீரனைப் போல் இருக்கிறான்.

ஒரு சோர்ந்து போன விசுவாசி, எழுந்து கொள்ள விரும்பாமல் கர்வாலி மரத்தின் கீழ் தூங்கும் தீர்க்கதரிசியைப் போல் இருக்கிறான்.

ஒரு சோர்ந்து போன தலைவர், தன் தேவனை அறியாத தலைவரைப் போல் இருக்கிறார்.

தங்கள் தேவனைப் பற்றி அறிந்தவர்கள், அவருடைய நாமத்தினால் பலத்த காரியங்களை செய்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

நீங்கள் சோர்ந்து போயிருக்கும் பொழுது தேவனால் கிரியை செய்ய முடியாது. அவர், நீங்கள் திரும்பவும் எழுந்து நிமிர்ந்து நின்று எதிரியை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர், நீங்கள் எழும்பி, உங்கள் தேவன் எப்படிப் பட்டவர் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்த பிரச்சினைகள் மாறி, சந்தோஷமான காலங்கள் உங்கள் வாழ்வில் கடந்து வரப் போகிறது என்று நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தூசியைப் போல் உங்களை அழுத்தும் பாரங்களை உதறி விட்டு அவருடைய பணியில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்.

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்களானால், எதிரியின் முக்கிய நோக்கமே உங்கள் இருதயத்தை ஒரு காகிதம் போல் ஆக்கி அதை காயப் படுத்த வேண்டும் என்பதுதான் என்று, தேவன் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறார் என்று அறிந்து கொள்ளுங்கள். தமக்குள் உங்களைத் தேற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

உங்கள் வாழ்கையில் என்ன நடந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாழ்க்கை எப்படி காணப்பட்டாலும், எத்தனைக் காலம் உங்கள் வாழ்வில் தேவன் அமைதியாக இருந்திருந்தாலும், எதனைக் காலம் உங்கள் ஆசைகள் நிராசையாக மாறியிருந்தாலும், இயேசு இன்னும் உங்களை நேசிக்கிறார் என்று அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மேல் தேவன் வைத்திருக்கும் அன்பு எப்பொழுதும் மாறாது என்று நினைவில் கொள்ளுங்கள். எதிரியின் பொய்களை கேட்பதை நிறுத்தி, தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் மேலான வாழ்கையை வாழும்படியாக எழும்புங்கள்.

கேள்வி: உங்களை அதிகமாக சோர்வுக்குள்ளாக்கும் காரியங்கள் ஏதேனும் உங்கள் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறதா? GTH நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். நீங்கள் நம்பிக்கையோடு இருப்பதற்கு உங்களுடைய முக்கியமான காரணம் என்னவென்று எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.