[English Translation] நேற்றைய அனுபவங்களில் இருந்து பெற்ற அறிவை வைத்து நாளைகளை நிர்ணயிப்பது மக்கள் தொடர்ந்து செய்யும் ஒரு தவறாகும். உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் அனுபவங்களும் எதிபார்ப்புகளும் பெரிய அளவில் முரண் பட்டிருக்கின்றன.
நீங்கள் செய்யும் தொழில்களிலானாலும் சரி, மற்றவர்களுடன் உள்ள உறவுகளிலானாலும் சரி, ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து நாளைக்குள் அடி எடுத்து வைக்க முடியாது.
கடந்த காலத்தில் சந்தித்த பண நஷ்டங்களினால் புதிய முயற்சிகள் எடுக்க தயங்கும் தொழில் அதிபர், கடந்த காலத்தில் ஏற்பட்ட மனக் காயங்களால் ஒரு புதிய உறவை தேர்ந்தெடுக்க தயங்கும் இளம் பெண் என்று பலருடைய காரியங்களைக் குறித்து நாம் கேள்விப் பட்டுக்கொண்டே இருக்கிறோம். மேலும், சந்தேகம் மற்றும் நம்பிக்கை இல்லாமையினால் சில உண்மையான உறவுகளுக்குள் விரிசல் உண்டாவதை பார்த்திருக்கிறோம். உங்களை கடந்த காலத்தில் காயப் படுத்திய ஒரு நபரோடு உங்கள் கணவனையோ மனைவியையோ ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு போதும் உங்கள் பிரச்சினைக்கான தீர்வை காண உதவாது. யூதாஸ் காரிஒத்தைப் போல் ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்ததினால் நீங்கள் மற்ற எல்லோரையும் நம்ப மறுப்பது சரியான செயல் அல்ல.
உங்கள் கடந்த கால அனுபவங்கள் உங்களை சமயோசிதமாக செயல்படுபவராக மாற்ற வல்லவை என்பது ஒரு புறம் உண்மையாக இருக்கும்போதிலும், இவைகளைக் குறித்து நீங்கள் கவனமாக இராவிட்டால், உங்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும் அளவு இவை வல்லமயானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையானதாக இருக்கிறது. உங்கள் கடந்த காலத்தில் இருந்து ஞானத்தைக் கற்றுக் கொண்டாலும் உங்கள் எதிர்காலத்திற்க்காக முன்பைக் காட்டிலும் தேவனை அதிகமாக விசுவாசியுங்கள். உங்கள் கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் எழும்ப இடம் கொடுக்காதிருங்கள். ஏசாயா 65:17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. இந்த நாள் எப்படியாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஊகங்கள் இல்லாமல் ஒவ்வொரு புதிய நாளுக்குள்ளும் உங்களால் நுழைய முடியுமா?
அதனால், நீங்கள் உங்கள் முதல் காதலினால் காயப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமையினால் உடைக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் மிகவும் நம்பினோர்களால் கைவிடப் பட்டிருந்தாலும், இவைகளைப் போல் பல அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் – நேற்றைய அனுபவங்களை வைத்து இன்றைய வாழ்வை வாழ்பவர்களாக இருக்க வேண்டாம். இன்றைய உறவுகளும் அவ்வாறே இருக்கும் என்று நினைக்காதீர்கள். ஏசாயா 43:18 சொல்கிறது, “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.” உங்கள் ஊகங்களை விட்டுவிடுங்கள், கவலைகளை தூக்கி எறிந்துவிடுங்கள், தேவன் உண்டாக்கின நாளான இன்றை சந்தோஷத்தோடு வாழுங்கள்.
உங்கள் அனுபவம் என்ன? பழைய நினைவுகள் உங்களை நிழலிடுகிறதா? திரும்பவும் கவனம் செலுத்துவோமாக.