[Spanish | Creole | Hindi | Chinese | French] | English]
கிறிஸ்துவோடு மூன்று வருடங்களாக தினந்தோறும் நடந்த சீடர்கள் ஏன் உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆண்டவரிடம் இருந்து விலகிசெல்லுதல்
பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தபோதே, தன்னைகுற்றவாளி என்று நினைத்து, மறுபடியும் தன்னுடைய பழைய வாழ்க்கையகிய மீன் பிடிக்கும் வேலைக்கு சென்றார்.
யோவான் 21:4ல் வேதம் சொல்லுகிறது – “விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள்அறியாதிருந்தார்கள்.”
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும்உங்களிடத்தில் உண்டா என்றார்?
அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுதுஉங்களுக்கு அகப்படும் என்றார்.
அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்குஅன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான்.
அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான்வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக்கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
இயேசு நம் ஒருவரையும் விட்டுவிடமாட்டார்!
பேதுரு கடலில் இருக்கும் போது, இயேசு அவரைத் தேடி வந்தார். இயேசு நம் ஒருவரையும் விட்டுவிடமாட்டார்.
கரையில் சீடர்கள் திரும்பி வரும்படி இயேசு காத்திருந்தார். ஆனால்அவர்கள் இயேசுவை அடையாளம் காணவில்லை.
முன்பு, இயேசு தம்முடைய சீடர்களைத் அவர்களுடையஅவ்விசுவாசத்திற்காக கண்டித்தார், ஆனால் இப்போது அவர்கள்இயேசுவிடம் இருந்து தொலைவிலிருந்தார்கள். இயேசு அவர்களைஉற்சாகப்படுத்தினார்.
பலர் குற்ற மனசாட்சியினால் ஆண்டவரை விட்டு தூரம் செல்லுகிறார்கள். மக்கள் இயேசுவிடம் இருந்து தூரத்திலிருக்கும்போது, கடிந்துகொள்ளுதல் அவர்களை இன்னும் தூரமாக கொண்டு செல்லும். சீடர்கள் இயேசுவிடமிருந்து தூரத்திலிருந்தபோது, அவர்களைக் கடிந்துகொள்ளாமல், அவர்களுக்கு அன்பை அளித்தார்.
2017ல் இயேசுவுடன் உங்கள் பயணம் எப்படி இருந்தது?
நீங்கள் கரையில் இருந்து தொலைவில் இருக்கிறீர்களா? நீங்கள் இன்னமும் கர்த்தருடைய குரலை கேட்க முடியுமா?
நீங்கள் பின்வாஙியிருந்தால், இப்பொழுது திரும்புவதற்கான நேரம்.
கரையிலிருந்து தூரம் போய், ஆவிக்குரிய திசையை நீங்கள் இழந்து போகும் முன்பாக, வழிகாட்டுவதற்கு இயேசுவை கூப்பிடுங்கள்.
இயேசு மிகவும் கருணையுள்ளவர். நம்முடைய உடைந்த நிலையில், ஆண்டவர் நம்மை தள்ளிவிடவில்லை.
வாழ்க்கை நன்றாக இருக்கும் போது, சிலர் நமக்கு அருகில் இருப்பாற்கள். ஆனால் இயேசு, பரிபூரண நண்பர், நம்முடைய ஆழமான உடைந்த நிலையில், நெருக்கமாகி வருகிறார்.
இயேசு பேசும்போது, கேளுங்கள், பின்பற்றுங்கள்!
“நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீற்கள?” இயேசு கேட்கிறார். அவர்கள் ஏன் அவரைக் காணவில்லை? இருப்பினும், அவர்கள் விரைவாக மறுபக்கத்தில் தங்கள் வலைகளை வீசினர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கவனியுங்கள், நம்முடைய எஜமானுடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதில் ஏதோ இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, அவருடைய வார்த்தைகளுக்கு நீங்கள் பதிலளித்தால், உங்கள் வாழ்க்கையில் எவ்விதத்தில் உடைந்து போனாலும் நீங்கள் மேன்மைப்படுவீர்கள்.
கிரிஸ்துவர் தோல்வி அடைகிறார்கள், ஏனெனில் இதயத்தின் போரில் ஆண்டவரின் குரலை கேட்பத்ல்லை.
உங்கள் படகு காலியாக இருந்தால் பரவாயில்லை. உங்கள் திருப்புமுனை வரவில்லை என்றால் பரவாயில்லை. திருப்புமுனை நம்இதயத்தின் ஏக்கமாக இருக்கக் கூடாது. மாறாக, அவரது குரலைத்தேடுங்கள்! பரிசுத்த ஆவியானவருக்கு இசைந்து அவருடையவார்த்தைகளைத் தேடுங்கள்.
நீங்கள் அவரது சத்தத்தை தேட முடியுமா மற்றும் வேறு எந்தத்தேர்வையும் இடைநிறுத்த முடியுமா? உங்கள் சூழ்நிலைகளைப் பற்றி.
நீங்கள் பயப்படும் முன், அவருடைய குரலைத் தேடலாமா?
ஆண்டவரையும் அவருடைய குரலையும் தேடுங்கள். ஆண்டவர் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் கேட்டால், மற்ற எல்லா பிரச்சினைகளும் பொருத்தமற்றவையாக மாறிவிடும். அவருடைய குரலை நீங்கள் கேட்க முடிந்தால், நெருக்கடியின் அழுகை அமைதியாக மாறிவிடும். நீங்கள் நின்று ஆண்டவரின் குரலை தேடினால், நீங்கள் வெளியே சென்று உலகத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க முடியும்.
நம்முடைய ஆழ்ந்த ஆசை நம் ஆண்டவரின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் என்றால், திருப்புமுனை நிச்சயம். அற்புதங்களை அல்ல, திருப்புமுனையை அல்ல, நம்முடைய எஜமானுடைய வார்த்தைகளில் விருப்பம் கொள்ளுவோம். திருப்புமுனையும் அற்புதங்களும் பின்தொடரும்.
வேலை மற்றும் சூழ்நிலைகளை காட்டிலும், நமக்கு என்ன தேவை என்றால், ஆண்டவர் தன் பிள்ளைகளிடத்தில் பேசுகிற சத்தத்தை கேட்பதுதான். அவருடைய சத்தம் நமக்கு வேண்டும்.
அவருடைய நெருக்கம் நம் மேண்மை
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று ஆண்டவருக்கு ஒரு கருத்து உள்ளது. ஆண்டவர் சொல்வதைக் கவனித்து, விரைவாக பதில் கொடுக்கும் போது, சூழ்நிலையை சமாளிக்க வல்லமை பெறுகிறோம்.
சில நேரங்களில், தோல்வி நம் கவனத்தை ஈர்கிறது. ஆனாலும் ஆண்டவர் நம் கோரிக்கைகளுக்கு, நமது சச்சரவுகளுக்கு, நமது உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோளுக்கு பதிலளிக்க மாட்டார். அவருடைய குரலை கேட்கும் தாழ்மையுள்ள இதயத்திர்க்கு அவர் பதில் கொடுக்கிறாற்.
அவருடைய குரலுக்கு கவனம் செலுத்தி விரைவில் பதிலளிக்க வேண்டும். அவருடைய கிருபை போதும்!
இயேசு அன்போடு, தம் சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இயேசு அன்போடு, தம் சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆண்டவர்இரக்கத்தினால் அவருடைய குழந்தைகளிடம் பேசுகிறார். அவருடைய சத்தத்தை கேட்பதும், அவரை அறிந்து கொள்வதுதான், அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு உள்ள கிருபை. அவருடைய நெருக்கம் நம் மேண்மை.