106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 1)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

February 22, 2019

கனடா தேசத்திலுள்ள இம்மானுவேல் சபையின் தீர்க்கதரிசி திரு Shyju Matthew அவர்களது வேதபாடத்தில் இருந்து நாட்களுக்குரிய தின தியான தொகுப்பை நீங்கள் வாசித்து பயனடைய உங்கள் முன் வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பெரிய ஆசிர்வாதத்தை கொண்டு வரும். தயவு செய்து இதை தேவை நிறைந்த உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

நாள் 1 – மறவாமல் நினைவில் வைக்க வேண்டியவை 

சங்கீதம்  106: 7-8 – எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உங்கள் சபையில் கர்த்தர் உயிரோடு இருக்கிறார்  என்பதை நிரூபிக்கும் அற்புதங்களை பார்த்திருப்பீர்கள். எபிரேயர் தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை பார்த்தார்கள். அனாலும் தேவனை முழுமையாக நம்பி விசுவாசிக்கவில்லை. மறுபடியும் அவர்கள் பழைய வழிக்கு திருப்பினார்கள்.

தேவனுடைய பலத்த கரத்தின் வல்லமையை பார்த்தும் பாவம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதாம் ஏவாள் தேவனுடைய மகிமையினால் மூடப்பட்டிருந்தார்கள்.ஆனாலும் பாவம் செய்தர்கள்.

எப்பொழுது நான் பத்திரமாக இருக்கிறேன் நான் விழமாட்டேன் என்று நினைக்கிறோம அந்த நேரமே நீ பாவத்தில் விழ வழி திறக்கிறாய். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவன் நம்மேல் வைத்திருக்கிற நிலையான அன்பை அறியாதிருக்கிறீர்கள். சோதனை வரும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்துவார் அதை கவனித்து எச்சரிக்கை அடைய வேண்டும்.

உபதேசங்கள் உன் பாதைக்கு வெளிச்சம். இத வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தேவனுடைய அன்பைகுறித்த வெளிப்பாட்டை பெற்றபின் நீங்கள் அதை பாதுகாக்க வேண்டும். எவ்வளவு நீங்கள் தேவனுடைய அன்பை நினைவில் வைத்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்ப வேரோடி நம்மோடு போராடுவான்.

தேவனோடு உங்களுக்கு உள்ள அனுபவத்தை காத்து கொள்ளுங்கள். விரோதி கட்டாயம் அந்த அனுபவத்தை தாக்க வருவான். ஆகையால் உங்கள் அனுபவத்தை எளிதாக எடுத்து கொள்ளாதீர்கள். சபைதான் வெளிப்பாடுகள் மூலமாத்தான் நிலைநிற்கிறது. சாத்தான் அதை தாக்குவான். 

எங்களோடு சேர்ந்து ஜெபியுங்கள்: கர்த்தாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எங்கள் இருதயத்தையும் சிந்தனைகளையும் எங்கள் வாழ்க்கையை பற்றிய வெளிப்பாடுகளையும் விட்டு தூரம் போகாமல் காத்துக்கொள்ளும். நாளை நாம் கர்த்தருக்கு காத்திருப்பதினால் கிடைக்கும் பலனை பற்றி பார்ப்போம்.