106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 2, 2019

நாள் 6: உங்கள் மோசேயை அங்கீகரியுங்கள்.

சங்கீதம் 106: 23-24 ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான். அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.

ஒவ்வொரு காலங்களிலும் கர்த்தர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரை உங்களுக்காகத் திறப்பிலே நிற்கும்படி கொண்டு வருகிறார். கர்த்தர் மதில்மேல் நிற்கிர காவல்காரர்களை போல ஜெபிக்கிற மக்களை சபையில் வைக்கிறார். கர்த்தர் அப்படிப்பட்ட மக்களைத் தெரிந்தெடுத்து சபையின் மக்களுக்காக ஜெபித்து நடக்க வேண்டிய வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் க்ற்றுக் கொடுக்க ஏற்படுத்துகிறார்.

யோபு 33:23-24 ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில், அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.

உன் வாழ்கையில் ஆயிரம் பேரில் ஒருவரை உன்னைக் குழியிலிருந்து தூக்கிவிட கர்த்தர் பயன்படுத்துவார். கர்த்தரால் அனுப்பப்பட்ட அப்படிப்பட்ட தேவ மனிதனை, போதிக்கிறவனைக் கண்டு கொண்டாள் அவர் உங்கள் வாழ்கையில் எந்தப் பகுதியில் பிரச்சனையிருக்கிறது என்பதையும் அதற்கு தீர்வுகான வழிமுறைகளையும் போதிப்பார்.

ஒருவனைத் திருத்துவது அல்லது சீர் பொருத்தப் பண்ணுவது என்பது கர்த்தரிடத்திலிருந்து வருகிற ஈவு, பாதுகாக்கப்படுவதற்குரிய அடையாளம் அல்லது நல்ல அறிகுறியாகும். சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அதிகமாக அன்புகூறுகிறதாலே அவர்களை கடிந்து கொள்ளுகிறதில்லை, திருத்த முயல்வது இல்லை. நீங்கள் அதிகமாக அன்பு கூறப்படுவதால் சிட்சைக்கு தப்பிவிடமுடியாது. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவர்களை சிட்சிக்கிறார். (எபிரேயர் 12:6)

உங்கள் வாழ்கையில் நீங்கள் மோசேயைக் கண்டு கொள்ளவும், உங்கள் மகிழ்ச்சியான நேரங்களில், சவால்களை சந்திக்கிர நேரங்களிலும், அவர்கலை மதிக்கவும் முடிகிறதா? அவர்கள் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த, வருகிற நன்மைகளை மறவாதிருங்கள்.

ஜெபம்: ஆண்டவரே, என்னைத் திருத்தும் படியாக சரிப்படுத்தும் படியாக வருகிற நல்ல வார்த்தைகளுக்கு விரோதமாக போர் செய்யாதபடிக்கு உமது கிருபையினால் என்னைக் காத்துக் கொள்ளும். நான் என்னை உருவாக்கும்படி ஆலோசனை கொடுக்கிற உம்மால் அனுப்பப்பட்ட தேவ மனிதர்களை நேசிக்க கனம் பன்ன தேவ கிருபை தாரும்.

நாளை நாம் கர்த்தரை நம்புவதின்மூலம் அவரைப் பிறதிப்பலிக்கிறதை குறித்து தியானிப்போம்.