நாள் 2: நாம் கர்த்தருக்கு காத்திருப்பதை குறித்து தியானிப்போம்.

கர்த்தருக்கு காத்திருத்தல்

சங்கீதம் 106:13 ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல் (காத்திருக்கவில்லை)

நீங்கள் கர்த்தரிடத்தில் பொறுமை இல்லாமல் அதாவது காத்திருக்காமல் இருக்கும்போது பாவம் மேற்கொள்ளுகிறது.பாவம் என்பது கர்த்தரிடத்தில் பொறுமையை இருக்காமல் இருப்பதின் விளைவே. நமது சிந்தனைக்கு கூட பதில் கொடுக்கிற தேவன் நமக்கு உண்டு.

நீதிமொழிகள் 23:7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.

எபிரேயர்கள் ஒரு இடத்திற்கு போகும்போது தீவிரமாக சென்றான்.அவர்கள் தேவனுடைய திட்டம் முழுமையாக வெளிப்படும் வரை காத்திருக்கவில்லை. ஆகவே சோர்ந்து போனார்கள்.அவர்கள் ஆவியோ முதிர்ச்சியற்ற தன்மையை அவர்கள் உணரவில்லை.கர்த்தரின் குணாதிசயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.கர்த்தரின் திட்டத்துக்கு ஒப்புக்கொடுப்பதிற்கு பதிலாக அவருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.

பொறுமையாக காத்திரு உன் மாம்ச எண்ணங்களின் தூண்டுதல் அடங்கும் வரை காத்திரு.கர்த்தருக்கு காத்திரு உன் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் மாற்றம் வரும்.

ஜெபி: ஆடவராகிய இயேசுவே உங்களிடமிருந்து ஆலோசனையை நன் தெளிவாக அறியும் வரை உங்கள் பதத்தில் காத்திருக்க போகிறேன். பரிசுத்த ஆவியானவரே உங்களுடைய சத்தத்தை கேட்டு அதன்படி நடக்கவும், குழப்பங்களை கொண்டுவருகிற எல்லா அந்நிய சத்தங்களையும் விட்டு வில்லாக உதவி செய்யும்.