எனது தமிழ் நண்பர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

June 15, 2013

GTH தமிழ் வலைப்பதிவின் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

shyju-mathew

இந்த வலைப்பதிவு என் இருதயத்தின் சிந்தைகளையும் என்னை ஊக்கப்படுத்தும் காரியங்களையும் பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இதன் ஆங்கில வலைப்பதிவை பல தேசங்களில் வாழும் பல ஆயிரம் ஜனங்களின் வாழ்க்கையில் இடைப்படும் கருவியாக கர்த்தர் உபயோகப்படுத்துகிறார். 2011 ஜனவரி மாதம் முதல் கர்த்தர் இந்த வலைப்பதிவை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்க எங்களுக்கு உதவி செய்தார்.

பின்னர் இதை பிரெஞ்சு மற்றும் மாண்டரின் மொழிகளிலும் மொழிபெயர்க்க உதவி செய்தார். இப்பொழுது இந்த வலைப்பதிவு தமிழிலும் மொழிபெயர்க்கப்படும்படி எங்களை நடத்தியுள்ளார். உங்களை கர்த்தருக்காக வல்லமையாக வாழ்பவர்களாக காண்பதே எங்கள் ஒரே நம்பிக்கை, ஜெபம் மற்றும் விருப்பம். நீங்கள் எங்களோடு கீழ் கண்ட முறைகளில் பங்கெடுக்கலாம் மற்றும் உதவி செய்யலாம்.

1. இந்த பதிவுகளை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பகிரலாம்.

2. உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நாங்கள் உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

3. இந்த வலைப்பதிவைsidebar-ல் சப்ஸ்கிரைப் செய்யலாம். அப்பொழுது நாங்கள் புதிய பதிவுகளை பதிவேற்றும் பொழுது, அவைகளை உங்கள் இன்பாக்சில் பெற்றுக்கொள்ளலாம்.

4. எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக் அல்லது ட்விட்டர்-ல் உறுப்பினராக இருந்தால் எங்கள் வலைப்பதிவை லைக்/பாலோ செய்து எங்கள் குடும்பத்தில் இணையலாம். நீங்கள் எங்கள் குடும்பத்தில் இணைவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

கர்த்தர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்க பண்ணுவாராக. இந்த பயணத்தில் நீங்கள் என்னோடு சேர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

ஷைஜு மேத்யு