தனித்து காத்திருப்பது

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 14, 2014

இந்த வலைப் பதிவு, வேர்ஜினியா பெரெய்ரா அவர்கள் எழுதிய விருந்தினர் வலைப் பதிவாகும். இவர் காப்பி ரைட்டராக வேலை செய்கிறார். SMM ஊழியங்களில் ஒரு ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். @virginiaville என்ற லிங்கில் இவரை தொடர்பு கொள்ளலாம்.

[English Translation] [French Translation] [Spanish Translation]

உங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளில், உங்கள் இரட்சிப்பிற்கு அடுத்ததாக முக்கியமான இடம் பெறுவது உங்கள் திருமணமாகும். திருமணத்தைக் குறித்த பிரசங்கங்களும் எப்படி ஒரு நல்ல கணவன்/மனைவியாக வாழ்வது என்பதைக் குறித்த கருத்துகளும் திருமணமான பின்னர் உதவியாக இருக்கும் என்றாலும், திருமணத்துக்காகக் காத்திருப்பது பல சமயங்களில், மரத்துப் போகச் செய்யும் மருந்து இல்லாமல் உங்கள் பல்லைப் பிடுங்குவதைப் போல வலி நிறைந்த அனுபவமாக இருக்கலாம்.

shyjumathew_blog_single_big

என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். திருமணம் என்பது இரண்டு பேர் ஒன்றாக இணைந்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக என்பதற்கும் மேல், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்க்காக இணைக்கப் படுகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தபொழுதிலும், தனிமையாக வாழ்பவர்களின் இரண்டாக நிலையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டும் அதை செயல் படுத்த முடியாமல் இருக்கும் போது, ஒரு திருமணம் அல்லது மற்ற நிகழ்சிகளில் மற்றவர்கள் ‘அடுத்து உனக்குத்தான் திருமணம்’ என்று கூறும் பொழுது ஏற்படும் சங்கத்தினால் அப்படிப்பட்ட தருணங்களை தவிர்க்க விரும்புவதை நான் அறிவேன்.

திருமணத்திர்க்காகக் காத்திருப்பது மிகவும் கடினமானதாக இருக்க வேண்டியதில்லை. இந்த உலகத்தை சிருஷ்டித்த தேவன் எல்லாவற்றையும் அறிவார். உங்களின் இந்த நிலையை குறித்து நீங்கள் மிகவும் வருந்துவதை அவர் விரும்புவதில்லை. எல்லாவற்றுக்கும் மேல், அவர் நம் தகப்பன்.

நேசிப்பதற்கு பயப்படுவது 

மற்றவர்களுடன் ஏற்பட்ட விரும்பத் தகாத அனுபவங்களினால், மீண்டும் அதே விதமான பிரச்சினைகளில் சிக்கி விடுவோமோ என்ற எண்ணம் மறுபடியும் ஒருவருடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து நம்மை தடுக்கும். இப்படிப் பட்ட காயங்களில் இருந்தும் வலிகளில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்வதற்காக நம்மைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொள்கிறோம். மீண்டும் ஒருவரை நம் வாழ்வில் நம்புவது கற்பனை செய்ய முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. இதனால் பிறரை நம்மிடம் நெருங்க முடியாமல் செய்வதற்காக நாம் செய்யும் செயல்கள் தேவன் நமக்காக வைத்திருக்கும் பெரிய திட்டங்களில் இருந்து நம்மை தொலை தூரம் கொண்டு சென்று விடுகிறது.

நேசத்தைக் கண்டுபிடிக்க முடியாமை

நீங்கள் யாரையும் நேசிக்க விரும்பாமலில்லை; நேசத்தை கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கானவரா என்று ஆராய்ந்து உங்களுக்கானவரை கண்டு பிடிக்காமல் இருக்கிறீர்கள். சாத்தியங்கள் முடிவற்றவையாக இருந்தாலும், இவைகளுடன் கூடிய மனமுறிவும் காயமும் அவ்வளவுக்கு அதிகமாக உள்ளது. நீங்கள், தேவன் உங்களை மறந்து விட்டாரா அல்லது ஒவ்வொரு நாளும் நீங்கள் இளமையாக மாற வில்லை என்று தேவன் நினைவில் கொள்கிறாரா என்று நினைக்கத் துவங்குவீர்கள்.

சிநேகத்தை இழந்து போவது

திருமணம் வரை சென்று பின் அது தான் அவர்கள் வாழ்வில் அவர்கள் எடுத்த அபாயமான தீர்மானம் என்று அறிந்ததினால் நின்று போன திருமணங்கள் ஏராளம். ஒரு தலையாக ஒருவரை விரும்பி, இவர்களுடைய அன்பை அவர் புரிந்து கொள்ளாததினால் வலியுடன் வாழ்பவர்களும் உள்ளனர். அவர்களுடைய இருதயத்தின் உடைந்த பகுதிகளே அவர்களுக்கு மிஞ்சி உள்ளது.

இந்த சூழ்நிலைகளில் எல்லாம், நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால், தேவன் இன்னும் உங்களை உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதை காண முடியும். பிற்காலத்தில் உங்களுக்கு தேவைப் படும் பண்புகளை உங்களுக்குள் தேவன் உருவாக்குகிறார். ஒரு அருமையான நண்பர் ஒரு முறை, ” வாழ்கையின் உயர்ந்த பாடங்கள் எல்லாம், தாங்க முடியாத அளவிற்கு நெருக்கப் படும் போது தான் நாம் கற்க முடிகிறது. தேவன் இன்னும் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள்.” நம்முடைய மட்டுப்படுத்தப்பட்ட அறிவு, இப்போதைய சூழ்நிலையை மட்டுமே பார்க்கிறது. ஆனால் தேவன் நம்மைக் குறித்த எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார், நம் சம்பந்தப் பட்ட எல்லாவற்றையும் அங்கீகரித்தும் முத்திரை இட்டும் இருக்கிறார்.

அதனால், இந்த நிலையில் என்ன செய்யலாம்?

உங்கள் வாழ்கையைக் குறித்த தேவனின் திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்

உங்களுக்கானவரை தேடும் வேலையில் இருக்கும் போது இதைக் கண்டு பிடிப்பது அவ்வளவு முக்கியமானதாக இல்லாதது போல் தோன்றினாலும், உங்களைக் குறித்த தேவனுடைய திட்டத்தை நீங்கள் அறியாவிட்டால், எந்த திசையில் பயணிப்பது என்று உங்களுக்கு தெரியாமல் போய்விடும். தேவனுடைய திட்டத்தை அறிந்து கொள்வீர்களானால், அது சம்பந்தப் பட்ட மனிதர்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும். உங்களைப் போலவே தரிசனமுள்ள மனிதர்களோடு நீங்கள் இணையலாம்.

மறவாதீர்கள்

தேவன் இன்னும் ஆளுகை செய்கிறார் என்று எப்பொழுதும் உங்களுக்கு நீங்களே நியாபகப் படுத்துங்கள். இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை சங் 121:3. உங்களை கவனித்துக் கொண்டு இருக்கும்போது தேவன் தூங்கி விடவில்லை என்று உங்களுக்கு நீங்களே கூறுங்கள். மற்றவர்களை நம்பவைப்பதற்கு முன்பு நீங்களே உங்கள் முழு இருதயதோடும் இதை நம்ப வேண்டும். அடுத்த முறை யாராவது உன் நேரம் கடந்து கொண்டு இருக்கிறது என்று கூறும்பொழுது ஒரு புன்னகையுடன், ‘நான் மறக்கப் படவில்லை என்று எனக்குத் தெரியும்’ என்று கூறுங்கள்.

முழு சமர்ப்பணம்

தேவனுக்கு உங்கள் இருதயத்தைக் கொடுங்கள். முழுதாக. அவர் கரங்களில் உங்கள் இருதயத்தை சமர்பியுங்கள். உங்களை உருவாகியவரைத் தவிர உங்கள் இருதயத்தை பராமரிக்கவும் சரியாக்கவும் வேறொருவரும் அதிகம் தகுதியானவரல்ல. கேட்பதைப் போல இது அவ்வளவு எளிதல்ல. தேவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்வது என்பது உங்கள் சுய எண்ணங்கள், உங்கள் கனவுகள் எல்லாவற்றுக்கும் மறித்து, தேவனைய உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்ட வாழ்வாகும். தேவனுடைய திட்டத்தைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் உங்களை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள் என்று உறுதி கொள்ளுங்கள். நீங்கள் நினைததர்க்கும் அதிகமாக காத்திருக்க நேர்ந்தாலும் நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்று நீங்கள் உறுதி கொண்டால், அவருடைய ராஜ்ஜியம் உங்களில் வரவும் அவர் சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறவும் உங்களை ஒப்புக் கொடுக்க முடியும்.

காத்திருங்கள்

இது, நீங்கள் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து காத்திருக்கும் படியான காத்திருப்பு அல்ல. அதனால், நீங்கள் காத்திருக்கும் போது என்ன செய்ய வேண்டும்? தேவனை சிநேகியுங்கள். இந்த உலகம் ச்நேகதைக் குறித்து உங்களுக்கும் விதைத்திருக்கும் தவறான கருத்துக்களை களையுங்கள். தேவன் இந்த சமயத்தில் உங்களுக்கு கொடுக்கவிருக்கும் நபருக்காக உங்களை தயார் செய்கிறார். தேவனுடன் அதிகமாக நேரத்தை செலவளிக்கும் போது, மற்றவர்களுக்குள் அதிகமாக அவருடைய குணாதிசயங்களை காண முடியும்.

கடைசியாக, நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபி 10:36

நீங்கள் காத்திருக்கும் போது உங்களை எது உறுதியாக வைத்திருக்கிறது? உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

குறிப்பு: விர்ஜினியா இந்த ஊழியத்தில் இணைந்திருந்தாலும் உலகப் பிரகாரமான பணியிலும் உள்ளார். தேவனைத் தேடும் இருதயம் உள்ள அவருக்கும், எல்லாவற்றுக்கும் மேல் தேவனை நேசிப்பதே மிகப் பெரிய விருப்பமாகும்.