106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 5)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 1, 2019

நாள் 5: தேவனுக்குப் பயப்படு உன் தேவைக்காக கோரிக்கை இடாதே

சங்கீதம் 106:15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.

நீங்கள் எதையாவது ஆண்டவரிடத்தில் தொடர்ந்து கேட்கும் பொழுது, அவர் அதை உங்களிடத்தில் கொடுப்பார். ஆனால், அதனைத் தொடர்ந்து வரும் விளைவுகளை தாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகளை நான் பார்த்திருக்கிறேன். கெட்ட குமாரன் கதையில் நாம் அதையே பார்க்கிறோம். தந்தை தம் மகன் பிடிவாதமாக கேட்பதை கொடுக்கிறார். குறித்த காலத்திற்கு முன்பாகவே அவன் பெற்று கொண்ட அனைத்தையும் இழந்து விடுகிறான்.

ஒரு காரியத்தை நீங்கள் தூக்கத்தை இழக்கும் அளவுக்கு விரும்புதல்; நீங்கள் ஆபத்தான கட்டத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு நல்ல அடையாளம். உன் ஆத்துமா பகுதியில் (மாம்சரீகமான ஆசை) உங்கள் ஆத்துமாவில் தாகத்தை அல்லது விளைவுகளை உண்டுபண்ணும் அதுபோல ஒரு ஆவிக்குரிய தணியாத ஒரு விருப்பம், ஆவிக்குரிய நல்ல விளைவுகளை உண்டுபண்ணும்.

நீங்கள் மாம்சரீகமான காரியத்தை ஒன்றினை விரும்பினால் மாம்சத்தின் விளைவுகளை அறுப்பீர்கள். ஆவிக்குரிய பிரகாசமான காரியத்தை விரும்பினால், ஆவிக்குரிய சமாதானமும் சந்தோஷமும் அறுப்பீர்கள்.

உங்கள் எல்லா விருப்பங்களும் கர்த்தரின் இருதய விருப்பத்திற்கு ஒப்பாயிருக்கிறதா என்று ஆராய முன், தங்கள் எப்பொழுதும் “கர்த்தர் இந்த என் விருப்பத்தில் இருக்கிறாரா?” என்ற ஒரு கேள்வியை கேட்டுப்பாருங்கள். உங்கள் ஒவ்வொரு விருப்பங்களும் கர்த்தருடைய பார்வையில் பரீசலிக்க கர்த்தரை நோக்கி வாருங்கள்.

ஒரு போதும் உங்கள் கீழ்படிதலுக்கு கர்த்தரிடத்தில் விலை பேசி விடாதீர்கள். கர்த்தருடைய பரிசீலத்தை தாண்டி உங்களுடைய எந்த ஒரு விருப்பத்தையும் மேற்கொள்ள விடாதீர்கள்.

விசுவாசத்தில் செயல்படுங்கள், உங்கள் எல்லா ஆசைகளும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். பொறுமையோடு கர்த்தருடைய சத்தத்தை கேட்டு அதன்படி செயல்ப்டுங்கள்.

ஜெபம்: ஆண்டவரே, தொடர்ச்சியான என் மாம்ச ஆசைகள் என் சிந்தனையை விழுங்கிவிடாதபடி, தூக்கத்தை விழுங்கிவிடாதபடி, இருதயத்தை, மனதை ஆக்கிரமித்துவிடாதபடி இயேசுவின் நாமத்திலே ஆசைகள் வெளியேறும் படி கட்டளையிடுகிறேன். இயேசு என்ற ஒரே ஆசையே என்னை ஆக்கிரமிப்பதாக. ஆமேன்.

நாளை நமது மோசேயைக் கண்டு பிழைப்பதைப்பற்றி அவரை முற்படுவோம், உண்மையாகவே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.