[English Translation] [French Translation] [Spanish Translation]
நம் தேவன் செயல்திட்டங்களின் தேவன். அதனால் அவர் என்ன செய்தாலும் எதிரி அதைப் போலவே செய்ய முயல்வான். பொய்க்கு பிதாவான அவன், முற்றிலும் பொய்யான செய்தியை ஒருபோதும் சொல்லமாட்டான். சத்தியத்தை புரட்டுவதில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் புலனுணர்வை புரட்ட துவங்குவான். நீங்கள் சுதாரிக்கும் முன்பாக, பாவத்தின் பிடியில் அகப் பட்டுக் கொள்வீர்கள்.
பாவத்தின் பிடியில் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது, எப்பொழுதும் அதன் வேரில் இருந்து துவங்க வேண்டும். அது எங்கிருந்து ஆரம்பித்தது என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை சரியாகக் கையாள முடியாது. காலப் போக்கில், அது வளர ஆரம்பிக்கும்.
பாங்கில் கொள்ளையடிப்பவர்கள், ஒரே இரவில் அப்படி மாறுவதில்லை. சிறிய திருட்டில் ஆரம்பித்து, தாங்கள் கண்டு பிடிக்கப் படவில்லை என்பதை உணரும்போது, தன்னம்பிக்கை அதிகரிக்கும்போது பாவத்தின் பிடியில் முழுவதுமாக அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
நம் வாழ்வில் காணப்படும் ஒவ்வொரு பிரச்சினையானாலும், ஆசிர்வாதமானாலும் இவ்வாறுதான் துவங்குகிறது. இவை எல்லாம் ஒரு விதையின் வழியாகத்தான் துவங்குகிறது. ஆதியாகமம் 8: 32 இல் தேவனுடைய வார்த்தை இவ்வாறு கூறுவதை காணலாம் “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.”
துன்பத்தின் விதைகள் உங்கள் பிரச்சினைக்கு வேர்கள் இருக்குமானால் அது ஒரு விதையில் இருந்து தான் ஆரம்பித்தது என்பது விளங்குகிறது. அதன் விதையை களைய காத்திருக்கும் போதே, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களால் அதற்க்கு நீர் பாய்ச்சுகிறீர்கள். அந்த விதை என்ன என்பதை கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள். உங்கள் பிரச்சினையின் மூலம் என்ன என்பதைக் கண்டறிந்தவுடன் எதிரியால் விதைக்கப்பட்ட அந்த விதையை அழித்துவிடுங்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் வேர் பற்ற ஆரம்பிக்கும் போது, மிகச் சரிய பின்விளைவுகளை மட்டுமே விளைவிக்கக் கூடியதாகத் தெரிவதனால் துணிந்து செல்ல உங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். ஆனால், அந்த விதை வளரும்போது பின்விளைவுகளும் அதிகமாகும் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.
சுவாரசியமாக, வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;”, ஏன்? ஏனென்றால், இரவில் தான் அந்த விதை துளிர் விட ஆரம்பிக்கும், அமைதியான அந்த நேரத்தில் தான், அதன் வேர்கள் ஆழமாக செல்லும். அதன் வேர்கள் எவ்வளவு ஆழமாகச் செல்கின்றனவோ, அதை கையாள்வது அவ்வளவு கடினமாக மாறிவிடும்.
1 திமோ 4:1 இல் மனசாட்சியில் சூடுண்ட அனுபவத்தைக் குறித்து பார்க்கிறோம். உங்கள் தோலில் சூடான இரும்பு படும்போது, அந்த இடத்தில உள்ள உயிரணுக்கள் இறந்து போவதினால், அந்தப் பகுதியில் எந்த உணர்வும் இல்லாமல் போகிறது. பாவம் உங்களை மிஞ்சிப் போகும்போது, நீங்கள் அதைக் குறித்த எந்தவிதமான குற்றவுணர்வும் இல்லாதிருப்பீர்கள்.
2 கொரிந்தியர் 10: 4-6 வாசிப்போம், “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.”
பாவத்தை சிறைப்படுத்த நீங்கள் தீர்மானிக்காதவரை பாவத்திற்கு உங்களை சிறைப்படுத்த அதிகாரம் உண்டு. தேவனுடைய வல்லமை உங்களுக்குள் ஏற்கனவே இருக்கிறது. உங்கள் கட்டுகளை அடையாளம் கண்டுகொண்டு அவைகளை நீக்க நீங்கள் முயலும்போது அதை செயல்படுத்துகிறீர்கள். பாவத்திற்கு இறக்கம் காட்டாதீர்கள்.ஒவ்வொரு நாளும் பாவத்தின் துவக்க இடத்தை அடைத்துப் போடுங்கள்.
ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன், உங்களை பரிசுத்தப் படுத்துமாறு தேவனிடம் கேட்டு, உங்கள் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியையும் தேவனுடைய கரத்தில் ஒப்படைத்து விடுங்கள். பாவத்தின் துவக்க இடத்தை கையாள தயாராகி, பாவத்தை விட்டு நீங்கள் ஓடும்போது, தேவனுடைய வல்லமை உங்கள் பெலனாக இருக்கும்.
எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும், உங்கள் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்பதைக் கண்டு கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் தான் பிரச்சினயானால், உங்கள் என்னகளில் இருந்து அவைகள் வரலாம். பின் அந்த சிந்தனைகள் உங்களுக்குள் எவ்வாறு வந்தன என்பதை கண்டுபிடியுங்கள். ஒரு நபரா, ஒரு வலைப் பதிவு அல்லது ஒரு படமா? அந்த விதையைக் கண்டுபிடித்து அதை தோண்டி எடுத்துவிடுங்கள். எதிரிக்கு சிறிதும் இடம் கொடுக்காதிருங்கள்.
தேவன் கொடுக்கும் விதைகள்
எதிரி விதைத்த விதைகளை நீக்கியவுடன், உங்கள் இருதயம் மற்றும் மனதை தேவன் கொடுக்கும் விதைகளினால் செழிப்பாக்குங்கள். தேவனைத் தேடும், தாழ்மையுள்ள தேவனுடைய பிள்ளைகளோடு உங்கள் நேரத்தை செலவளிப்பதின் மூலம் புத்துணர்வடயுங்கள். தேவனுடைய வார்த்தைகளை வாசித்து ருசியுங்கள். ஜெபத்தோடு தேவனுடைய வார்த்தைகளில் மூழ்குங்கள். தேவனுடைய வார்த்தைகள் வேர்விட்டு, துளிர்விட இடம் கொடுங்கள்.
விதைகள் வளர்வதைக் குறித்து இயேசு கிறிஸ்து பேசும்போது, விதைகளை மடியச் செய்யும் மூன்று தவறான இடங்களைக் குறித்து பேசினார்.
1. வழியருகே விழுந்த விதைகள்
இந்த விதைகள், அவைகளை விழுங்கிப் போடும் பறவைகள் காணும்படியாக இருந்தன. உங்களை சுற்றியுள்ளவர்கள் யார்? உங்களை தேவனிடம் நெருங்கும்படியாக உங்களுக்கு உதவுபவர்களா அல்லது தேவனைவிட்டு உங்களைப் பிரிப்பவர்களா? உங்கள் விதைகளை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனைத் தேட உங்களுக்கு உதவுபவர்களை உங்களை சுற்றிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
2. கற்பாறையான நிலத்தில் விழுந்த விதைகள் சுய நீதி, தன்னிறைவு மற்றும் மனக்கிளர்ச்சி ஆகியன உண்டாக்கும் ஒரு பொய்யான அனுபவமாகும். வேர் விட முடியாததினால், புயலின் மத்தியில் இவை சீக்கிரமாக வேருடன் பிடுங்கப் பட்டுவிடும். இது உங்களை ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் செய்துவிடும். நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து வளர உங்களுக்கு உதவி செய்பவர்களை உங்களை சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்.
3. முள்ளுள்ள நிலத்தில் விழுந்த விதைகள்
உங்களை ஆளுகை செய்து, உங்களை தேவனை விட்டு பிரிக்கும், உலக பாரங்கள், செல்வத்தின் மேல் உள்ள மயக்கம், உலகத்தின் மேல் உள்ள இச்சை ஆகியன உள்ள இடமே முள்ளுள்ள இடமாகும்.
உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் தேவ காரியங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள். எதிரியின் பொய்களுக்கு எந்தவிதமான இரக்கமும் காட்டாதிருங்கள். வேதம் சொல்வதை நம்பி, அவைகளின் படி தைரியமாக, வெளிப்படையாக வாழுங்கள்.
அன்பு, சமாதானம், சந்தோஷம் ஆகிய விதைகளை யாராவதுடைய வாழ்வில் இன்று விதைக்க நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களாலும், என்னாலும் இயேசுவைப்போல் வெற்றியாளரை விட சிறந்தவராக வாழ முடியும்.
துன்பத்தின் விதைகளை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கிறீர்களா? பிரச்சினையின் வேரை களைவதில் உங்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது எது? தேவனுடைய விதைகளை உங்கள் வாழ்வில் எப்படி விதைக்கிறீர்கள்?