தேவன் உங்களை நம்பி ஆசிர்வாதங்களை கொடுக்கலாமா?

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

January 24, 2014

[English Translation]

ஒரு நன்மையான எதிர்காலத்திற்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்த வலைப் பதிவு முக்கியமானது. கிறிஸ்தவர்களாக, தேவனை ஒரு தகப்பனாகப் பார்க்கிறோம். உண்மையில், நாம் தேவனுடைய சுதந்தரராக இருக்கிறோம். கலா 4:7 கூறுகிறது, ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.”

நாம் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வோம் என்று நினைப்பதில் ஆபத்து உள்ளது. உண்மையை கூறவேண்டுமானால், பலவேளைகளில் நாம் மிகவும் விரும்பிய ஒன்று கிடைக்காதபோது பிணங்குகிறோம்.

நானும் பல சமயங்களில் அவ்வாறு செய்திருந்தாலும், தேவன் என்னை பண்படுதியதற்க்குப் பின், அந்த காலங்களை நினைக்கும்போது, சில கதவுகளை அடைததற்க்காக தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால் அந்த சமயத்தில் நான் அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லாதிருந்ததை இப்பொழுது உணர்கிறேன்.

அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு முக்கியமான வசனத்தை நாம் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். கலா 4: 1,2 சொல்கிறது, பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.” அதை எளிமையான வார்த்தைகளில் கூறவேண்டுமானால், நீங்கள் எல்லா ஆசிர்வாதங்களுக்கும் சுதந்தரவாளியாயிருந்தாலும், சரியான காலம் வரும் வரை பரலோகத்தில் இருக்கும் நம் பிதா அதை உங்களுக்கு கொடுப்பதற்கு காத்திருக்கிறார்.

உலகப்ரகாரமான ஒரு எடுத்துக்காட்டை கூறவேண்டுமானால், ஒரு குழந்தைக்கு தன தந்தையின் காரைப் பயன்படுத்த எல்லா உரிமைகளும் இருந்தாலும் அதற்கான சரியான தருணம் வரும் வரை அவர் எவ்வாறு அதற்க்கு அனுமதிக்க காத்திருப்பதை போலவாகும். இல்லாவிட்டால், ஆசிர்வாதமாக இருக்கவேண்டிய அந்தக் காரே அப்பிள்ளையின் வாழ்வை அழித்துவிடும். நாம் எப்பொழுது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறோம் என்று என்னும் எவ்வளவு அதிகமாக நம் பரலோகத் தந்தை அறிந்திருக்கிறார்!

இன்று நான் எதை அழுத்தமாக கூறவிரும்புகிறேன் என்றால், இந்தக் காரியம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருந்துகிறது. ஆவியானவர் எனக்கு கற்றுக்கொடுத்த பிரகாரமாக, நான் இன்னும் பிதாவின் விருப்பங்களுக்காக என் விருப்பங்களை விட்டுக்கொடுக்கிறேன். ஆம், ஆவிக்குரிய விருப்பங்களையும் தான்!

ஆவிக்குரிய வரங்களை நான் வாஞ்சிக்கும் பொழுதெல்லாம், என்னை நானே கட்டுப் படுத்தி, “தேவனே அந்த வரத்தை உமக்கு சரியாகப் படுகிற வேளையில் உம் பயன்பாட்டிற்காக எனக்கு கொடுத்தருளும்” என்று கூறுவேன். ஏனென்றால் பல சமயங்களில் நாம் நம்முடைய சுயநலத்திற்காக சில விருப்பங்களைக் கொண்டிருப்போம். நாம் தயாராக இல்லாத ஒன்றை பெற்றுக் கொள்வோமானால், சீக்கிரம் விழுந்து போவோம். தேவன் எனக்கு ஆசிர்வாதங்களைக் கொடுக்கும் வேளையில் நான் அதற்காக தயாராகவும், அதைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தாழ்மையுடனும் இருக்கும் வேளையில் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறேன்.

ஒரு முறை என் நண்பர் A.W. டோசர் அவர்களின் வார்த்தைகளாகிய “தேவன் எப்பொழுதும் அவசரப் படுகிறவர் அல்ல. அவருக்கு தன் வேலைகளை முடிக்கவேண்டிய கடைசி நாள் என்று எதுவும் இல்லை.” என்பதைக் கூறினார்.

உங்கள் பதவி உயர்வு உடனே கிடைக்காவிடில் சோர்ந்து போகாதிருங்கள்.

உங்களை எவருமே அங்கீகரிக்காவிட்டாலும் சோர்ந்து போகாதிருங்கள்.

மக்கள் உங்கள் ஊழியத்தை பாராட்டாவிட்டால் புண்படாதிருங்கள்.

உங்கள் கனவுகளெல்லாம் உடனே நடக்காவிட்டால் சோர்ந்து போகாதிருங்கள்.

தேவனுக்குள் உங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.

பிற்காலத்தில் ஆசிர்வாதமாக இருக்க போவது காலத்திற்கு முன் நமக்குக் கிடைத்தால் அது ஒரு சாபமாக ஆகிவிடலாம் – டீ . டி. ஜேக்ஸ்.

தாவீதுக்கு 14 வருடங்களுக்கு பின்பதாக நடக்கவிருந்த காரியத்திற்காக தேவன் முன்னமே அவனை அபிஷேகித்தார். தாவீதை தேவன் ராஜாவாக அபிஷேகித்தவுடனே அவனை தொடர்ந்தது இழிவுகளும், தாக்குதல்களும், பொல்லாங்குகளும் தான். ஆனாலும் அவர் தேவனுடைய சித்தத்தில் இருந்து விலகாமல் இருந்தார். தேவன் அவரை அவருடைய சிங்காசனதிற்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல உதாரணம் அப்சலோம். அவன் பெருமையின் காரணமாக தன் காலத்திற்கு முன்பே சிங்காசனத்தை அடைவதற்கு முயற்சிதான் பின் அந்த பெருமையின் காரணமாகவே விழுந்தும் போனான்.

நீதி 20:24 சொல்கிறது, “கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்”. தேவன் இவ்வாறு நடத்துகிற வழியில் தான் நாம் முழுமையான ஆவிக்குரிய வளர்ச்சி பெற முடியும் என்பது சுவாரசியமாக இருக்கிறது. இவ்வாறு நடத்தப் படும் ஒவ்வொரு அடியும் நம்மை தேவன் வைத்திருக்கும் ஆசிர்வாதங்களுக்கு தயார் படுத்துகிற அனுபவங்களாக இருக்கிறது. அந்த அனுபவங்கள், நாம் அடையவேண்டிய இலக்கிற்கு நேராக நம்மை நடத்தும் நண்பர்களை நாம் சந்திக்க வைக்கின்றன. அவை, தேவனை போலவே மாறுவதற்கு நம்மை உருவாகும் அனுபவங்களாகும். பின் ஏன் நாம் மின்தூக்கியை நோக்கி செல்லவேண்டும்?

என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள், தேவனே, உம்மிடமிருந்து வராத எந்த உயர்வும் எனக்கு கிட்டாதிருப்பதாக. என் உயர்வுக்கு உம் நேரம் வரும் வரை காத்திருக்க எனக்கு உதவி செய்யும். அந்த உயர்வு வரும்பொழுது என் கண்கள் அதின் மேல் இல்லாமல் உம் மேல் இருப்பதாக.”

கேள்வி: தேவன் நடத்தும் விதங்களை விடுத்து குறுக்கு வழியில் செல்லும்படியான தூண்டுதல்கள் உங்களுக்கு வந்ததுண்டா? தேவன் இதின் மூலமாக உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தார்?