ஒருவருடைய வாழ்வில் கசப்பைக் கொண்டுவருவதற்கு எதிரி பல வழிகளை உபயோகிக்கிறான், அதில் முக்கியமான ஒன்று அவர் நிராகரிக்கப்படும் தருணங்களாகும்.
நிராகரிக்கப் படுவது பல எதிர்மறையான காரியங்களை ஒரு மனிதனுக்குள் செய்துவிடும்; இது ஒரு அசவுகரியமான உணர்வை தரும். நிராகரிக்கப் பட்ட இருதயத்தை குணமாக்க பல நேரங்களில் தேவனால் தான் முடியும். அந்த உணர்வை வென்றுவிட்டேன் என்று கூறினாலும் பல வேளைகளில் அவர்களை சுற்றி இருப்பவர்களை நடத்தும் விதத்தில் அவர்களுக்குள் அது இன்னும் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
இந்த எடுத்துக்காட்டை ஒரு முறை கேட்டேன்; நம் வயிறு உணவை நிராகரிப்பதினாலேயே நாம் வாந்தி பண்ணுகிறோம். நம் உடலினால் நிராகரிக்கப்பட்ட உணவு உடனே நாற்றம் எடுக்க ஆரம்பிக்கிறது. நிராகரிக்கப் பட்டதோடு சம்பந்தப்பட்ட நாற்றம் நம் மனதை பாதிக்கிறது. நீங்கள் தகுதியானவராக அங்கீகரிக்கப் படவில்லை என்கிற எண்ணம் மனதை மிகவும் புண் படுத்துகிறதாகும்.
தேவன் பார்க்கிறவிதமாய் இதைப் பாருங்கள்
தேவனுடைய பார்வையில் பார்க்கும் படி நம்மை நாமே பழக்குவிக்க வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்குள் கடந்து போகும் பொழுதெல்லாம், தேவன் உங்களை எவ்விதமாய்ப் பார்க்கிறார் என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் தகப்பனாக இருக்கிறார். மற்ற எவரைவிடவும் அவர்தான் உங்கள் நிராகரிக்கப்படுதலை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். தேவன் உங்கள் பக்கத்தில் இருப்பாரானால், உங்களை நிராகரித்தவர் யாராக இருந்தாலும், தேவன் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஒரு நாள், மக்களின் பாராட்டுக்களை நான் எவ்வாறு கவனத்துடன் கையாள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் நினைவூட்டினார். ஏனென்றால், மக்களின் பாராட்டுதல்கள் உங்களை பாதிக்குமானால், அவர்களின் நிராகரிப்பு உங்களை அதிகமாய் பாதிக்கும். நல்ல நாளில் ஹோசானா என்று புகழ்கிற மக்கள், மற்றொரு நாளில், ‘சிலுவையில் அறையுங்கள்’ என்று கூக்குரல் இடுவார்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளும் போது தேவனுக்கு நன்றி சொல்ல உங்களைப் பழக்கிக் கொள்வீர்களானால், நீங்கள் நிராகரிக்கப் படும் போது தேவனுக்குள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
நீங்கள் விடுதலையாவதற்க்காக விடுதலை செய்யுங்கள்
மனிதர்கள் எப்பொழுதும் மனிதர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தவறு செய்யும் சுபாவம் உள்ளவர்கள் என்பதையும் நாம் எப்படி மறக்க முடியும்! அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து செல்ல தள்ளப் படுகிறீர்கள், ஆனால் அது உங்கள் உலகத்தின் முடிவு அல்ல. ஏனென்றால், உங்கள் வாழ்க்கை முடிந்தது என்று தேவன் சொல்லும் போதுதான் முடிவடைகிறது. அதனால், தேவன் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததினால் எப்பொழுதும் இலகுவான இருதயத்தோடும் புன்சிரிப்போடும் இருப்பதையே தெரிந்து கொள்ளுவேன். அதனால், கிறிஸ்து தன்னை நிராகறித்தவர்களையும் நேசித்ததை போல, நாமும் அனைவரையும் நேசிக்க முற்படுவோமாக. ரோமர் 15:7 சொல்கிறது, “ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.” உங்கள் வாழ்க்கை தேவனுக்கு புகழ்ச்சியை கொண்டுவருகிறதா?
வேதாகமத்தில் உள்ள, நம்மை எச்சரிக்கும் வசங்களில் ஒன்றான மத்தேயு 6:15 கூறுகிறது, “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதினால், பரலோகத்தின் பிரஜை தான் பூமியின் மிக உயர்ந்த பிரஜையாக இருக்கமுடியும்! வேதாகமம் முழுவதிலும் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு காரியம், மனிதனால் நிராகரிக்கப் படுவது தேவனால் அங்கீகரிக்கப் படுவதற்கு வழிவகுக்கும். கிறிஸ்து நிராகரிக்கப் பட்டதினாலேயே அவர் மூலைக்கல்லாக மாற்றப் பட்டதற்க்குக் காரணமாயிருந்தது. மாற்கு 12:10 “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;”
அதனால், தேவனால் உங்கள் ஆசிர்வாதங்களுக்குள் விடுவிக்கப்படும்படியாக உங்களை நிராகரித்தவர்களை இன்று விடுவியுங்கள்.
உங்கள் கருது என்ன? தேவனுக்குள் உங்களை விடுவித்தது எது? கீழே உள்ள பகுதியில் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.