106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 8)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

March 4, 2019

நாள் 8: ஆண்டவரிடம் வைராக்கியமாயிருங்கள்.

சங்கீதம் 106: 28-31 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது. அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பயணம் பண்ணும்போது மோபாத் பெண்களைக் கண்டு, அவர்களை தங்கள் கூடாரத்திற்கு அழைத்து வந்தார்கள்.இந்த பெண்கள் வந்த போது, அவர்கள் தங்கள் விக்கிரகங்களை அவைகளுக்கு கொண்டு போனார்கள். சீக்கிரமாகவே இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களில் ம்ற்ற தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள். ஆகையால், தேவனின் கோபம் அவர்கள் மேல் வந்தது. தேவனின் கோபத்தில் அவர் வாதையை அனுப்பினார் மற்றும் குறுகிய காலத்தில் 24,000 பேர் ஜனங்கள் இறந்தனர்.

அப்படியாக ஜனங்கள் மறித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் ஒரு மீதியான ஸ்திரியை தன் கூடாரத்திலே விபச்சாரம் பண்ண அழைத்து வந்தான். தேவக்கோபம் வெளிப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் தேவன் கோத்திரத்லைவர்களையெல்லாம் கண்டு பிடித்து கொல்ல செய்யச் சொல்லும்போது பினேகாஸ் என்ற மனிதன் கர்த்தருக்காக வைராக்கியம் கொண்டவனாக எழும்பி பாவம் செய்த அந்த மனிதனையும் ஸ்திரியையும் ஈட்டியை வைத்து கொன்று போட்டான். தேவனுக்கு முன்பாக பினேகாஸ் செய்த காரியத்தினால் வாதை நிறுத்தப்பட்டது. தேவன் பினேகாஸ் செய்த காரியத்தை பாராட்டி நீ இப்பொழுது செய்த காரியத்தினிமித்தம் நான் உன் சந்ததியை ஆசீர்வதிப்பேன் என்றைக்கும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார்.

நண்பரே, இந்த உலகத்தில் இன்றைய நாட்களில் பாவம் ஏராளமாக இருக்கிறது. ஒரு பினேகாஸை தேவன் இந்நாட்களில் எழுப்பினால், பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ ஜனங்களின் பாவத்திற்கு முடிவுகட்ட முடியுமா? அந்த நாட்கள் போல ஒரு ஈட்டியை இப்பொழுது எடுக்க முடியாது ஆனால், யார் அவர்கள் செய்த மாம்ச கிரியைகளை அழிப்பார்களோ? ஆவியிலே போர் செய்து நம் சந்ததிகளை மாற்ற முன்வருவார்களோ?

எண்ணாகமம் 25: 11-13 நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

அன்பான துறவிகளே, நம் தேவன் பரிசுத்தமாக இருப்பது போல நீங்களும் பரிசுத்தமாக இருங்கள். பிலேகாசின் தேவன் நம் தேவனாக இருக்கிறார்.

ஜெபம்: பரலோகப்பிதாவே, பிலேகாசைப் போலவே தேவன் மேல் ஆவிக்குரிய வைராக்கியம் தாரும். நான் உம்மை கனப்படுத்தி உயர்த்த விரும்புகிறேன். தேவனே, நீர் என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறீர். தேவனே பரிசுத்தமாக வாழ சுத்த ஜீவியத்தில் அடுத்தபடி உயர இந்த கடைசி கால சந்ததிக்காக வாழ உமது கிருபை தாரும்.

எங்களோடே இணைந்து இருப்பதால் நன்றி கூறி நீதியான் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.