[English Translation][Spanish Translation][French Translation]
அவ்வபொழுது சில மிக முக்கியமான செய்திகளால் என் ஆவியில் உந்தப் படுவதுண்டு. கடைசியாக அவ்வாறு நான் உணர்ந்தது நாம் கிறிஸ்தவ வாழ்வில் தளராமல் இருக்க வேண்டும் என்பதை குறித்தாகும். இந்த செய்தி அவ்வாறான செய்தியாகும்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஜெபக் கூடத்திற்காக இந்தோனேசியா சென்றிருந்தோம். அந்த சமயத்தில் என் இருதயம் பல எண்ணங்களால் அலைகழிக்கப்பட்டது.
நம் உலகம், சோகமான முடிவுகளைப் பெற்ற பல சிறந்த தலைவர்களின் உதாரனங்களாலும், உயர்ந்த முடிவுகளைப் பெற்ற பல சாதாரண மனிதர்களின் உதாரனங்களாலும் நிறையபெற்றிருக்கிறது. மிகப் பெரிய ஆற்றல் உள்ள தலைவர்கள் எவ்வாறு எதிரியின் தந்திரங்களில் சிக்கினார்கள் என்று என் ஆவி வருந்திக் கொண்டே இருந்தது. நாமும் அதே வழியில் தான் நடக்கிறோம் என்றும் நமக்கு ஆலோசனையும், ஞானமும், மிகுந்த கிருபையும் தேவை என்பதை உணர்ந்தேன்.
கூட்டங்கள் முடிந்து நான் என் படுக்கைக்கு சென்ற பின்னும் இதைக் குறித்து என் ஆவி புலம்பிக் கொண்டே இருந்தது. அமைதியான கண்ணீர் என் தலையனையை நனைக்க, தேவன் இதைக் குறித்து என்ன நினைக்கிறார் என்று அறிந்து கொள்ள மிகவும் ஏங்கினேன். அசாதாரணமாக, அதிகாலை 4 மணிக்கு வந்த ஒரு கனவினால் எழுந்து கொண்டேன். பரிசுத்த ஆவியானவர் நான் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று உணர்ந்தேன். படுக்கையை விட்டு இறங்கி, புத்துணர்ச்சி பெற்று, ஜெபிக்க ஆரம்பித்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னோடு பேச ஆரம்பித்தார். நமக்கு உதவி செய்பவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட சில காரியங்களை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
- சரியான ஆவியை புதிதாக்குதல்
தாவீது ராஜா, ஒரு வெற்றிபெற்ற தலைவராகவும் இஸ்ரவேலரின் ராஜாவாகவும் இருந்த பொழுதிலும், அவரிடத்தில் பல குறைகள் இருந்தன. தேவனை தன் முழு இருதயத்தோடும் நேசித்த பொழுதும், அவருடைய எல்லா ஆசிர்வாதங்களையும் பறிக்கக்கூடிய குறைகள் அவரிடம் இருந்தன. ஆனால் அவர் நெருங்கி வாழ்ந்த ஜெபம் ஒன்று அவரிடம் இருந்தது. சங் 51:10 “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”
அந்த காலை நேரத்தில் என் ஹோட்டல் அறையில் பரிசுத்த ஆவியானவர் என்னிடம், தெளிவாகக் கூறியது என்னவென்றால், இதன் தீர்வு என்னவென்றால், தினந்தோறும் சரியான ஆவியை புதுப்பிப்பதே என்பதே ஆகும்.
தன் ராஜ சிம்மாசனத்தில் சில காலங்கள் கழித்த பின்னர், அதுவரை அவர் வீழாத ஆசைகள் அவரை வீழ்த்த ஆரம்பித்தது. காமத்தில் இருந்து விபசாரமாகி அது கொலை செய்வதில் முடிந்தது. தேவனுடைய காரியங்களில் பழகிப் போனதே பிரச்சினையாக இருந்தது. உயர்ந்த இடங்களில் உள்ள எதனை பேர் தங்கள் செய்வது எல்லாம் சரி என்று நினைப்பதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? நம் ஊழியம் எத்தனை பெரியதாக இருந்தாலும், நம் சபை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்க வேண்டிய ஒரு ஜெபம் உண்டு – “தேவனே, நிலைவரமான ஆவியை எங்களுக்குள் புதுப்பியும்.” நாம் எத்தனை வருடங்களாக சபைக்குப் போகிறோம் என்பது காரியமல்ல. நம் அன்றாட வாழ்விற்கு நம் ஆவியை பழக்குவிக்காமல் இருப்போமாக. நம் ஆவியைப் புதுபிக்க வேண்டியிருக்கிறதா? இந்த உலகத்தின் அழுக்குகளில் இருந்து நம் ஆவியைப் புதுப்பிக்க ஒவ்வொருநாளும் விரும்புவோமாக.
- அனுபவங்களுக்கு அப்பாற்பட்டு
சில காரியங்களை கற்றுக்கொண்ட பின்னர் ஒருவரை மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்று அழைக்கப் படுவார், சிலர் அவரை ஒரு குரு என்றும் அழைப்பதுண்டு. அவர் சில அனுபவங்களுக்குள் கடந்து சென்றதினால், அவர் அந்த காரியங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் தேவ ராஜ்யத்தை பொறுத்த வரையில், மனிதனுடைய அனுபவங்களை சார்ந்து தேவன் செயல் படுவதில்லை. தேவன் எல்லாக் காரியங்களையும் புதிய வழியில் செய்கிறார். அனுபவம் பெறுவது தவறு என்று நான் கூறவில்லை, அனுபவங்கள், நம் ஊழியத்தில் ஜாக்கிரதையாக இருக்க நமக்கு உதவினாலும், நாம் காண்கிறவைகளினால் வாழ்பவர்களல்ல, விசுவாசத்தால் வாழ்பவர்கள், தேவன் நாம் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறார் என்பதைக் கேட்டு அதன் படி வாழ்பவர்கள். நாம் சொந்த அனுபவங்களினால் நடத்தப் படாத படிக்கு, நம் ஞானத்தை பரிசுத்த ஆவியானவரின் கரங்களில் ஒப்படைத்து விட்டு, நாம் காண்பவைகளையும் கேட்பவைகளையும் அப்பாற்பட்டு விசுவாசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
- போதகத்தை ஏற்றுக்கொள்ளும் ஆவியுடயவராயிருத்தல்
தான் உயிர்தெழுந்த பின்னரும் ஆவியானவரால் நடத்தப் பட்டவராயிருந்தது இயேசுவை குறித்த ஒரு சுவாரசியமான விஷயமாகும். அப்போஸ்தலர் 1:2 சொல்கிறது, தன் சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவரால் தன் கற்பனைகளை தெரிவித்தார் என்று. நாம் கற்றுக் கொள்வதை நிறுத்தும் பொழுதுதான் ஆபத்து இருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் கற்று அறிந்து கொண்டீர்கள், இனி கற்பதற்கு உங்களுக்கு ஒன்றுமே இல்லை என்று நீங்கள் நினைக்கும் பொழுது தான் ஒரு தேக்க நிலைக்குள் உங்கள் கால்களை பதிக்கிறீர்கள். நாம் கடந்து போகும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் ஊழியத்தில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று கருதாமல், தேவனுடைய காரியங்களுக்கு உங்கள் வாவின் எல்லா பகுதிகளையும் திறந்த இருதயத்துடன் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத நபரிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஆயத்தமாயிருங்கள்.
- சாதித்து விட்ட உணர்வு
அந்த காலை தேவனோடு நான் இருந்த பொழுது, சில காரியங்களை சாதித்து விட்டோம் என்று நாம் நினைவில் இருந்து நாம் எவ்வளவு நம் இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆவியானவர் எனக்கு நினைவூட்டினார். எதனால் என்றால், இந்த உணர்வின் வேர் பெருமையாகும், பெருமையின் உணர்வு, எதையும் சாதிக்காமல் இருப்பதற்கு சமானமாகும். நம்முடைய சாதனையில் பாதுகாப்பாக உணர்ந்தோமானால், இரண்டு காரியங்கள் நடக்கும்.ஒன்று, நாம் தேவனுக்கு மகிமையை கொடுப்பதை நிறுத்தி விடுவோம், மற்றொன்று, இதன் மூலமாக நம் வாழ்வில் மேலும் பெருமையை விதைக்கும் படியாக எதிரிக்கு வாசலை திறந்து வைத்து விடுவோம். பின்னர், நாம் அறிந்திருக்கிறபடியாக நாம் ஒரு நாள் விழுவோம்.
நாம் தீர்கதரிசனமாக கூறிய 3 காரியங்கள் நடந்தவுடன் நாம் தேவனாக மாறுவதில்லை, நாம் இன்னும் தேவனுடைய ஊழியக் காரர்களாகத் தான் இருக்கிறோம். நம் சபையில் 10,000 விசுவாசிகள் இருந்தால், அது தேவனால் உண்டானது என்று அறிந்து, இன்னும் நம் பட்டணத்தில் கிறிஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருக்கிற மற்றவர்களுக்காக ஜெபிப்போம். நாம் எதையாவது சாதித்து விட்டோம் என்று நினைக்கும் நொடியில் தான் நாம் விழ ஆரம்பிக்கிறோம். தேவனால் நாம் செய்ததைவிட பெரிய காரியங்களை நம்மைக் கொண்டு செய்யமுடியும் என்பதை மறக்காதிருப்போமாக.
2 கொரி 10:18 சொல்கிறது, “தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.” தேவனுக்கு மகிமையை கொடுக்காமல் நமக்கு மகிமையை கொண்டு வரும் சாதனைகளை நம் இருதயத்தில் இருந்து எடுத்துப் போட்டு, நம் இருதயத்தைக் காத்துக் கொள்வோமாக.
5. சுத்தமான கைகளையும் இருதயத்தையும் பெரும் படி முயற்சிப்போமாக
மறுபடியும், தாவீதின் வாழ்கையிலிருந்து, சங் 24: 3-6 வசனங்களில் அவர், சுத்தமான கைகளையும் இருதயத்தையும் உடையவர்களே தேவனோடு வசிப்பவர்கள் என்று எழுதுகிறார். சுத்தமான கரங்கள் நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்களை குறிக்கிறது. நாம் நீதியாக நடக்கிறோமா? சுத்தமான இருதயம் நம் இருதயத்தின் நோக்கங்களையும் எண்ணங்களையும் குறிக்கிறது. ஜனங்களை சந்தோஷப் படுத்துவதற்காக நாம் சில சமயங்களில் அதற்காகவே செய்யும் படியாக முனைகிறோம்.
கலா 1:10 சொல்கிறது, “இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.”
சிலசமயங்களில், நான் நல்ல செயல்களை செய்யும் பொழுதும் நல்ல எண்ணங்களினால் செய்யாமல் அந்த சந்தர்பத்தில் நன்மை தரும் என்பதற்காகவே செய்கிறோம். தேவனுக்கு முன்பாக நம் கரங்களையும் இருதயத்தையும் தூய்மையாக வைதிருப்போமாக. நாம் செய்யும் செயல்களினால் தேவனை பிரியப் படுத்துகிறோமா அல்லது மற்றவர்கள் பிரியப் படவேண்டும் என்று செய்கிறோமா? தேவனுக்காக பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு இடையில் மற்றவர்கள் முன் உள்ள உங்கள் பிம்பத்தை மறந்துவிடுங்கள்.
தாவீது இப்படிப் பட்ட ஜெபங்களை செய்தார் என்று கவனியுங்கள். நாம் இப்படிப் பட்ட வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பு அதற்க்கான பலனை தேவனிடம் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும். இதை துவங்குவதற்கு ஒரு நல்ல இடம் நம்முடைய இருதயத்தில் இருந்து மாற்றத்தை விரும்பும் விருப்பங்களை எடுத்துப் போட்டு, தேவனை பிரியப் படுத்தும் வாழ்க்கைக்கு தயாராவது தான்.
நீங்கள் இதில் இருந்து கற்றுக்கொண்டது என்ன?